கலைஞர் கலைஞர்தான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 11, 2023

கலைஞர் கலைஞர்தான்

featured image

வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் குஜராத் முதலமைச்சர் இந்தியாவில் இட ஒதுக்கீடு கொடுத்தது போதும் என்ற ஒரு வாதத்தை முன் வைத்தார்.
இது தொடர்பாக தலைநகர் டில்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர். அவருக்கு மொழி பெயர்ப்பு செய்தவர் ஆ.ராசா.
முதலில் மாநாட்டில் பேசியவர்கள் முடிந்த வரையிலும் கலைஞரின் சமூகநீதிக் கொள்கைக்கு விரோதமாகவே அதிகம் பேசினர்.
கடைசியாக கலைஞர் பேச ஆரம்பித்தார்.! கலைஞர் சொன்னது இது தான். “இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு இந்தியா முழுவதும் இனி அனைத்து தேர்வுகளையும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த வேண்டும். தேர்வுக்கு தயாராக 2 வார காலம் பயிற்சி அளிக்கப் படும். தேர்வில் தேறினால் மட்டுமே கல்வி வேலைவாய்ப்பு”. அரங்கம் அரண்டு போனது.!
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த குஜராத் முதலமைச்சர் மோடி, “20 ஆண்டு காலம் தாய் மொழியில் கல்வி கற்ற ஒருவரால் எப்படி 2 வார காலத்தில் வேற்று மொழியில் தேர்வுக்கு தயார் ஆகி வெற்றி பெற முடியும்?” என ஆவேசமாய் கத்தினார்.
அதற்கு கலைஞர் மெல்லிய சிரிப்புடன் சொன்னார், “20 ஆண்டு காலம் தாய் மொழியில் கல்வி கற்ற ஒருவரால் 2 வார காலத்தில் எப்படி வேற்று மொழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற முடியாதோ, அப்படியே தான் 2000 ஆண்டுகளாக ஒடுக்கப் பட்ட மக்களால் வெறும் ரெண்டு தலைமுறைக்கு மட்டுமே வழங்கப்படும் சலுகைகளால் சமூக நீதித் தேர்வில் சமுதாயத்தை வென்று விட முடியாது.என்று தன்னுடைய வாதத்தை முன்வைத்தார். அரங்கமே நீண்ட நீரம் கைதட்டி கலைஞரை கவுரவித்தது.

No comments:

Post a Comment