சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதி பெறாமல் கட்டடங்கள்
தீட்சிதர்கள் மீது வழக்கு!
சென்னை, டிச. 3- கடலூர் மாவட்டம், சிதம்பரம், அருள்மிகு சபாநாயகர் திருக்கோயிலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி வல்லுநர் குழு மற்றும் ஆணையர் அனுமதி பெறாமல் பழமையான கட்டங்களை அகற்றி புதிய கட்டடங்கள் பொது தீட்சிதர்களால் கட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணைய ரால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேற்கண்ட மனு நீதியரசர்கள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு 1.12.2023 அன்று வரப்பெற்றது.
விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞர் என்.ஆர்.ஆர்.அருண் நட ராஜன், அனுமதியின்றி கட்டப்பட்டுவரும் கட்டுமானங்கள் குறித்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதற்கு பொது தீட்சி தர்கள் சார்பில் ஆஜரான வழக் குரைஞர் மேற்கொண்டு கட்டுமானப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாது என உத்தரவாதம் அளித்ததை பதிவு செய்து கொண்டு வழக்கின் விசாரணையை எதிர்வரும் 6.12.2023 தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment