திருப்பத்தூர், டிச. 7- திருப்பத்தூர் நகரில் டிசம்பர் 2 தமிழர் தலைவர் தகை சால் தலைவர் ஆசிரியர் அவர் களின் 91ஆவது பிறந்தநாள் விழா. தனது வாழ்நாட்களை தந்தை பெரியார் என்ற மாமனிதரின் உயர்ந்த லட்சியங்களை இந்த மானுட சமூகத்தில் கொண்டு சென்று, இச் சமூகம் ஜாதி, மத பேதங்கள், ஏற்ற தாழ்வுகள் அற்ற பகுத்தறிவுயுள்ள சமூகமாக மலர நாளும் பொழுதும் கொண்ட லட் சியத்தை நோக்கி ஓடிக்கொண்டி ருக்கும் தன்னலமற்ற ,ஒப்பற்ற தமி ழர் தலைவரின் பிறந்தநாள் விழா காலை 10.00 மணிக்கு வி. பி. சிங் மண்டபம் பெரியார் – அண்ணா சிலை அருகில் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.
பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழர் தலைவர்ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆபத்து!ஆபத்து! மீண்டும் குலத்தொழில் திணிப்பா? என்ற புத்தகம் பொது மக்களி டையே வழங்கப்பட்டது.
கழக தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று , ஆசிரியர் அவர்கள் முன்னெடுத்து செல்லும் தந்தை பெரியார் அவர்களின் லட்சியத் திற்கு தோழர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.
இந்நிகழ்விற்கு வருகை புரிந்த வர்களை மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் வரவேற்றார், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், ஆசிரியர் அவர்களின் வாழ்க்கை குறித்தும், இயக்க பணிகள் குறித்தும், கழக தோழர்கள் நாம் அனைவரும் ஆசிரியருடன் இணைந்து தந்தை பெரியார் அவர்களின் இலட்சி யத்தை அடைவோம் என்று உரை யாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில், மாவட்ட அமைப்பாளர் மா. சி. பாலன், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம். என். அன்பழ கன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட எழுத்தா ளர் மன்ற தலைவர் நா. சுப்புலட்சுமி, நகர தலைவர் காளிதாஸ், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரா.கற் பகவள்ளி, கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் நாகராசன், சோலை யார்பேட்டை நகர தலைவர் க.மதியழகன், சோலையார்பேட்டை நகர அமைப்பாளர் இராஜேந் திரன், சோலையார்பேட்டை நகர துணைசெயலாளர் சு. சிவக்குமார், சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர் த. பாண்டியன்,
மாவட்ட தொழிலாளரணி செயலாளர் பன்னீர், மாவட்ட தொழிலாரணி அமைப்பாளர் மோகன், சுந்தரம் பள்ளி ஒன்றிய தலைவர் சங்கர், நகர அமைப்பாளர் கா. முருகன், விடுதலை சிறுத்தை மண்டல செயலாளர் இரா. சுபாஷ் சந்திரபோஸ், சோலையார் பேட்டை கழக பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், ஆகியோர் பங் கேற்றனர்.
No comments:
Post a Comment