– கருஞ்சட்டை –
இலங்கையில் இருந்து மதுரை வந்த ராமர் பாதுகை!
மதுரை, டிச.17 ‘‘இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை – மதுரை விமான நிலையத்தில் கும்ப கலசம் தீபாராதனை உடன் வரவேற்பு!
அயோத்தியில் வரும் ஜனவரி மாதம் இருபத்திரண்டாம் தேதி ராமர் கோவில் கும் பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி, பல் வேறு நகரங்களில் இருந்து ராமர் கோவிலுக்கு சிறப்பு பொருட்கள் கொண்டு செல்லப்படு கிறது. இதனையொட்டி, ராவணனால் இலங் கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்க ராமர் இலங்கை சென்ற நிகழ்வை முன்னிட்டு இலங்கையிலிருந்து ஸ்ரீ ராமர் பாதுகையை எடுத்துக்கொண்டு விமானம் மூலம் மதுரை வந்தனர். மதுரை விமான நிலையம் வந் தடைந்த ஸ்ரீராமர் பாதுகையை பாஜகவினர் ஹிந்து முன்னணி பரிசத் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து மாலைகள் அணிவித்து வணங்கி சென்றனர். வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் முடித்து நாளை ராமேஸ்வரம் கோவிலில் ராமர் பாது கைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் அதைத் தொடர்ந்து, ராமர் பாதுகை யாத்திரையாக புறப்பட்டு எட்டு மாநிலங்கள் வழியாக அயோத்தி சென்ற டையும் என நிர்வாகிகள் கூறினர். சுரேஷ் சவான் கடந்த பத்து தினங்களுக்கு முன் இலங்கை சென்று ராமர் பாதுகையுடன் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.”
(‘தினமணி’, 17.12.2023)
தந்தை பெரியார் பொதுக்கூட்டங்களில் அடிக்கடி சொல்லுவதுண்டு.
‘உங்கள் பக்தியின் யோக்கியதை என்ன? 14 வருடம் இந்த நாட்டை செருப்பு ஆண்டு இருக்கிறதே!’ என்பார்.
ராமன் பட்டாபிஷேகம் சூட்டிக் கொள் ளாமல் வனவாசம் சென்ற நிலையில், அவன் செருப்பை வைத்து பரதன் அரசாட்சி செய்தான் என்கிறது வால்மீகி இராமாயணம் – அதைத்தான் தந்தை பெரியார் இப்படி சொல்லுவார்.
அவ்வளவு நீண்ட காலத்திற்குப் போவா னேன்?
‘‘காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிருக்கை கிராமத்தில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெயரால் மணி மண்டபம் ரூ.3 கோடி செலவில் 151 தூண்கள் முழுக்க கிரானைட் கற்கள் – அவரது செருப்பு வைத்துப் பூஜிக்கப்படும்!”
(‘ஆனந்தவிகடன்’, ஜூன் 1997)
எவ்வளவு வெட்கக்கேடு!
இந்த யோக்கியதையில்தான் பக்தியின் ‘டிகிரி’ இருக்கிறது. பஞ்சகவ்யம் என்ற பெயரால் மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் அய்ந்தையும் கலந்து தட்சணை கொடுத்துக் குடிக்கவில்லையா?
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று சொன்னால், வானுக்கும், பூமிக்குமாகத் தாவிக் குதிப்போர், சிந்திப்பார்களா?
No comments:
Post a Comment