மாணவர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் பெற்றோர்களின் கண்டிப்பு அவசியம் குழந்தை உரிமை ஆர்வலர்கள் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 21, 2023

மாணவர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் பெற்றோர்களின் கண்டிப்பு அவசியம் குழந்தை உரிமை ஆர்வலர்கள் கருத்து

featured image

சென்னை, டிச. 21- பள்ளி பருவத் தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க, சிறு வயதில் இருந்தே மாணவர்களை கண்டிப்புடன் பெற் றோர் வளர்க்க வேண்டும் என குழந்தை உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட் டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே பள்ளிப் பருவத்தின் போது சிறார்கள் வாகனங்களை இயக்குவதால் ஏற்படுத்தும் விபத் துகள், அதிர்ச்சியடையச் செய் கின்றன. அப்படி ஒரு சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18.12.2023 அன்று நடந்துள்ளது.
அம்மாவட்டத்தின் ஜி.நாகமங் கலத்தைச் சேர்ந்த கிரி(17) தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, நண்பர்கள் அஜய்(15), ராகவன்(14) ஆகியோரு டன் சென்ற நிலையில் மூவருமே சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதேபோல், இதற்கு முன்னதாக நடந்த பல சம்பவங்களில், சிறார் கள் இயக்கிய வாகனத்தால் ஏற் பட்ட விபத்தில் தவறிழைக்காத பலரும் உயிரிழந்துள்ளனர்..

இதுதொடர்பாக குழந்தை உரிமை ஆர்வலர் வைகுந்த் கஸ் தூரி ரங்கன் கூறியதாவது:
தற்போதைய தலைமுறைக்கும் முந்தைய தலைமுறைக்கும் இடையே மிகப்பெரிய அளவில் இடைவெளி உள்ளது. இதனால் குழந்தை வளர்ப்பு என்பதில் சவால்கள் உள் ளன. எனவே, சிறு வயதில் இருந்தே கண்டிப்புடன் குழந்தைகளை வளர்த்தால் மட்டுமே வளரிளம் பருவத்தில் பெற்றோரின் வார்த் தைகளுக்கு அவர்கள் மதிப்பளிப் பார்கள்.
சரி, தவறுகளை குழந்தைகளுக்கு தெளிவாகக் கூறி புரிய வைக்கும் மனதிடம் பெற்றோருக்கு இருக்க வேண்டும். குழந்தைகள் செய்யும் அனைத்து விடயங்களுக்கும் ஆத ரவு தெரிவிக்கக் கூடாது.
அதே நேரம், பெற்றோரால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. பாடத்திட்டம், ஆசிரியர், சமூகம், ஊடகம் என அனைத்துத் தரப்பிலும் விழிப் புணர்வு வாயிலாக பங்களிப்பு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மோட்டார் வாகனச் சட்டப் படி, ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் பெறாமல் 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறார் களின் பெற்றோர் அல்லது பாது காவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராத மும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
மேலும், 25 வயது வரை சம் பந்தப்பட்ட சிறாரால் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது என்பன உள்ளிட்ட 5 தண்டனைகள் வழங் கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment