பத்மசிறீ விருதை திருப்பி அனுப்பும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

பத்மசிறீ விருதை திருப்பி அனுப்பும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா

featured image

புதுடில்லி, டிச. 23- இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கு வழங்கப்பட்ட பத்மசிறீ விருதை பிரதமரிடம் திருப்பி அளிக்க இருப்பதாக பஜ்ரங் பூனியா அதிரடியாக அறிவித்து உள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங் கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சையில் சிக் கினார். அவரை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல் யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் தலை மையில் டில்லியில் ஒரு மாதத்துக்கு மேலாக பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து பிரிஜ்பூஷன் பொறுப் பில் இருந்து ஒதுங்கினார்.
‘நீதிமன்ற வழக்கு, சிலநடை முறை சிக்கல் காரணமாக பலமுறை தள்ளிவைக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் டில்லியில் நேற்று முன் தினம் (21.12.2023) நடந்தது. இதில் பிரிஜ் பூஷனின் நெருங்கிய ஆதர வாளரான சஞ்சய் சிங் சம்மேள னத்தின் புதிய தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். பெரும்பா லான பதவிகளை பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் கைப்பற்றினர். பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தி னரை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று ஒன்றிய விளை யாட்டுத்துறை அமைச்சர் அனு ராக் தாக்குரை சந்தித்து வலியுறுத் தியும் மல்யுத்த வீரர்களின் எண் ணம் நிறைவேறவில்லை.

பூனியாவின் அதிரடி முடிவு
பிரிஜ்பூஷனின் கூட்டாளிகள் பொறுப்புக்கு வந்ததும் அதிர்ச்சி அடைந்த ஒலிம்பிக்கில் வெண் கலம் வென்ற வீராங்கனையான சாக்சி மாலிக் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க அறிவித்தார்.
இந்த நிலையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வித மாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான அரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் 29 வயதான பஜ்ரங் பூனியா, ஒன்றிய அரசு தனது சாதனையை அங்கீகரித்து 2019ஆம் ஆண்டில் வழங்கிய பத்மசிறீ விருதை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்து விருது மற்றும் போராட்டம் தொடர்பான கடிதத்தை வழங்க நாடாளுமன்றம் நோக்கி கிளம்பிய அவரை முன்அனுமதி பெறாததால் காவல்துறையினர் தடுத்து நிறுத் தினர். இதைத் தொடர்ந்து பஜ்ரங் பூனியா தனது ‘எக்ஸ்’ தளத்தில் அந்த கடிதத்தை பகிர்ந்தார்.

கடிதத்தை பகிர்ந்தார்
எனக்கு வழங்கப்பட்ட பத்மசிறீ விருதை பிரதமரிடம் திருப்பி ஒப்ப டைக்கிறேன். இதைத் தான் கடி தத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன் என்று கூறி விட்டு, அந்த கடிதத்தில்,
‘பிரதமரே…. நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நிறைய வேலைகளில் நீங்கள் பிசி யாக இருப்பீர்கள்.நாட்டின் மல் யுத்த வீரர்கள்மீது உங்களது கவ னம் திரும்ப இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து கடந்த ஜனவரி மாதம் மல் யுத்த வீரர்கள் நடத்திய போராட் டத்தை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். கடுமையாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று அரசு கூறிய பிறகு போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் அவர் மீது ஒரு வழக்கு கூட பதிவுசெய்யப்படவில்லை. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் நாங்கள் மீண்டும் வீதிகளில் இறங்கி போராடினோம். அதன் பிறகு குறைந்தபட்சமாக பிரிஜ் பூஷன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
ஜனவரி மாதம் பிரிஜ் பூஷன் மீது 19 மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்திருந்தனர். ஏப்ரலுக் குள் அது 7 ஆக குறைந்து விட்டது. அதாவது 12 மல்யுத்த வீராங்க னைகள் மீது பிரிஜ் பூஷன் தனது அதிகாரத்தை செலுத்தி இருக் கிறார்’ என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.

சமாதானப்படுத்த முயற்சி
இந்த விவகாரம் குறித்து ஒன்றிய விளையாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பத்மசிறீ விருதை திருப்பி கொடுப்பது பஜ்ரங் பூனியா வின் தனிப்பட்ட முடிவு. இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நியாயமாகவும், ஜனநாயக முறைப்படியும் நடந்தது. பஜ்ரங் பூனியாவின் முடிவை மாற்றுவதற்கு நாங்கள் முயற்சிப்போம்’ என்றார்.

இடைநீக்கத்தை தளர்த்த கடிதம்
இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை நடத்துவ தில் காலதாமதம் ஏற்பட்டதால் உலக மல்யுத்த சம்மேளனம் கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதி இந்திய மல் யுத்த சமமேளனத்தை இடைநீக்கம் செய்தது. தற்போது புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டு விட்ட தால் இடைநீக்கத்தை தளர்த்தும் படி உலக மல்யுத்த சம்மேளனத் துக்கு புதிய தலைவர் சஞ்சய் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment