திருநெல்வேலி, நவ.3 “வருமான வரித் துறை, சி.பி.அய்., அமலாக்கத் துறை போன்ற ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப் புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னைக் கூட மிரட்டின. ஊரை விட்டுப் போகச் சொன்னார்கள். அலைபேசி எண்ணை மாற்றச் சொன்னார்கள்” என்று தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.
திருநெல்வேலி வண்ணை நகரில் தனியார் பொறியியல் கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங் கேற்று வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை பேரவைத் தலைவர் மு. அப்பாவு வழங்கினார். பின் னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 3 முறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற் றுள்ளனர்.
இடைத்தரகர்கள்
தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி கள் முதலமைச்சரின் வழி காட்டுதல் படி சிறப்பாகச் செயல்படுகின்றனர். ஒன்றிய புலனாய்வு அமைப்புகளான வருமான வரித் துறை, சி.பி.அய்., அமலாக்கத் துறை போன்ற ஒன்றிய அரசு நிறு வனங்கள் ஒன்றிய அரசின் மனநிலையைத் தெரிந்து கொண்டு பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்களைக் குறிவைத்து அவர்களை முதலில் அணுகுவது, பிறகு இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டிப் பேசுவது, குறிப்பிட்ட தொகையை வாங்குவது என்று நடந்து கொள்கிறார்கள்.
என்னிடமும் கூட கடந்த 3 மாதமாக இடை த்தரகர்கள் பலர் பேசி னார்கள். நான் சரியாக இருக்கிறேன், என்ன வந்தா லும் மேலே இருக்கிறவர் பார்த்துக் கொள்ளுவார் என்று பதில் தெரிவித்தேன். ஒன்றிய அரசு மூலம் உங்களிடம் பிரச்சினை செய்யச் சொல்லி இருக் கிறார்கள் என இடைத் தரகர்கள் என்னிடம் பேசி னார்கள். ஊரை விட்டு எல்லாம் போகச் சொன் னார்கள், அலைபேசி எண்ணை மாற்றச் சொன் னார்கள். இப்படி எல்லாம் எனக்கு கடந்த 3 மாத காலமாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
ஆளுநரின் அலட்சியம்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். அர சமைப்பு சாசனம் 91இ-ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பி னால், 6 வாரங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ, எவ்வளவு கிடப்பில் போட முடியுமோ அதைச் செய்து கொண்டிருக்கிறார். உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இந்திய அரசமைப்பு சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். மதச்சார்பின்மை நாடு என்று அரசமைப்பில் சொல்லப்பட்டுள்ள நிலையில் இந்தியா மதச் சார்புள்ள நாடு என்று பேசி வருகிறார்” என்று தெரிவித்தார்.தமிழ்நாட் டில் அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய விவகாரம் குறித்த கேள்விக்கு, “அண்ணா மலை அவரை குறித்து அவரே இந்தக் கருத்தைச் சொல்லி இருக்கிறாரா?" என்று பதில் கேள்வி எழுப் பினார்.
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கோடி அளவுக்கு 500 முதல் 1000 பெருநிறுவனங்களின் கடனை ஒன்றிய அருசு நீக்கியுள்ளது. ஆனால், விவ சாயிகள் வாங்கிய கடனை இதுவரை தள்ளுபடி செய்யவில்லை." இவ்வாறு சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.
No comments:
Post a Comment