சென்னை டிச.7 புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட் டங்களிலும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் வடசென்னை பகுதிகள் அதிக மாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதுதொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க உத்தர விடக்கோரியும் வழக்குரைஞர் ஞானபானு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.
எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது
அப்போது மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜ ராகி, புயல் எச்சரிக்கை அறிவிக் கப்பட்டது முதல் போர்க்கால அடிப்படையில் அனைத்து முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை யும் தமிழ்நாடு அரசு எடுத்தது. வெள்ள பாதிப்பு உள்ளபகுதி களில் வெள்ள நீரை வெளியேற்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவி னருடன் இணைந்து தமிழ் நாடுஅரசு அதிகாரிகளும், மாநகராட்சிஊழியர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தவிர வெள்ளத் தால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ள வேளச்சேரி, பள்ளிக் கரணை, மேடவாக்கம், மேற்கு தாம்பரம், முடிச்சூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட வட சென்னைபகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும், அவர்களை நிவா ரண முகாம்களில் தங்க வைக் கவும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
களப்பணியில் அதிகாரிகள்
சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள மீட்புப் பணியில் 14 அமைச்சர்கள் மற்றும் அய்ஏஎஸ் அதிகாரிகள் களப்பணியில் ஈடுபட்டு வருகின் றனர். மருத்துவ முகாம்களும் முழுவீச்சில் செயல்பட்டு வரு கிறது. ஆவின் பால்தட்டுப் பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
அதையேற்ற நீதிபதிகள், மனுதாரர் குறை இருந்தால் அரசிடம்முறையிடலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
நீதிமன்ற பணிகள்…
இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் வழக்கு களை விசாரித்துக் கொண்டிருந் தனர். அப்போது பெரும்பாலான வழக்குரைஞர்கள் சென்னையில் பெய்த கனமழை மற்றும் மிக் ஜாம் புயல் காரணமாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
மேலும் ஆஜரான ஒருசில வழக் குரைஞர்களும் தங்களால் கோப்புகளை படித்து விசார ணைக்கு தயாராக முடியவில்லை என்றும் எனவே, வழக்கு விசா ரணையை தள்ளிவைக்க வேண் டும்என்றும் கோரினர்.
அப்போது தலைமை நீதிபதி, மும்பை உயர் நீதி மன்றத்தில் வழக்கமான பருவ மழை காலங் களிலும், வெள்ளம் போன்ற அசாதரண சூழல் களிலும் ஒரு நாள் கூட நீதிமன்ற பணிகளை தள்ளி வைத்தது கிடையாது.
நீதிமன்ற ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்றாலும் கூட நீதிமன்ற பணிகள் அன் றாடம் போல் நடக்கும் என கருத்து தெரிவித்து விசார ணையை தள்ளி வைத்து உத்தர விட்டார்.
No comments:
Post a Comment