புறநகர் ரயில் சேவை மீண்டும் துவங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 6, 2023

புறநகர் ரயில் சேவை மீண்டும் துவங்கியது

சென்னை, டிச. 6-  புறநகர் மின் ரயில் சேவையில் சென்னை - தாம்பரம் வழித் தடத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக, சென்னையில் பல இடங்களில் ரயில் தண்டவாளம் மழை நீரில் மூழ்கியது. மழைநீர் தேங்கிய பகுதியில் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், புறநகர் மின்சார ரயில் சேவை நேற்று (5.12.2023) பிற்பகலில் இருந்து இயங்கத் தொடங்கியது. சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங் கல்பட்டு வழித்தடத்தில் 30 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், சென்னை கடற்கரை - திரு வள்ளூர் - அரக்கோணம் வழித்தடத்தில் 30 நிமிட இடைவெளியிலும், திருவொற்றி யூர் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு ரயிலும், வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை வழித்தடத்தில் 30 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை புதன்கிழமையும் இதே அட்டவணையில் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் கூறியுள்ளது.


சியாச்சினில் முதல் முறையாக ராணுவ பெண் மருத்துவர்

சிறிநகர், டிச. 6- சியாச்சின் ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் மருத்துவராக தேர் வானவர் கேப்டன் கீதிகா கவுல். இவர் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலைப் பகுதியில் பணி யாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இவர் ராணுவத்தின் பனி சிறுத்தை படைப்பிரிவில் (ஸ்னோ லியோ பர்ட் பிரிகேட்) சேர்ந்து சியாச்சினில் பணியாற்றுவதற்கான பிரத்யேக பயிற் சியை சியாச்சின் போர்க்கள பள்ளியில் பெற்றார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவிதமான பயிற்சிகளை அவர் திறம்பட முடித்தார். இதையடுத்து அவர் சியாச்சின் பனிமலைப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சியாச்சினில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிப்பார்.

No comments:

Post a Comment