புதுடில்லி,டிச.5- சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்றி உள்ளன.
மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்கும் காங்கிரஸ் சந்தித்த தோல்விகளுக்கும் ஏராளமான காரணங்கள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் களைகட்டி வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க தேர்தல் புள்ளி விவரங்களை வைத்தும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
"நடந்து முடிந்த 4 மாநிலத் தேர்தலில்
காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 4,90,69,462;
பாஜக பெற்ற வாக்குகள் 4,81,29,325
இதிலிருந்து மக்கள் யார் பக்கம்??" என்று கேள்வி எழுப்புகின்ற ஒரு பதிவும் சமூக ஊடகங்களில் வெளி யாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம்:
பாஜக பெற்ற வாக்குகள்: 72,34,968
காங்கிரஸ் பெற்ற வாக்குகள்: 66,02,586
மத்திய பிரதேச மாநிலம்:
பாஜக பெற்ற வாக்குகள்: 2,11,08,771
காங்கிரஸ் பெற்ற வாக்குகள்: 1,75,64,353
ராஜஸ்தான் மாநிலம்:
பாஜக பெற்ற வாக்குகள்: 1,65,23,568
காங்கிரஸ் பெற்ற வாக்குகள்: 1,56,66,731
தெலங்கானா மாநிலம்:
பாஜக பெற்ற வாக்குகள்: 32,57,511
காங்கிரஸ் பெற்ற வாக்குகள்: 92,35,792
4 மாநில தேர்தல்களில் பாஜக பெற்ற மொத்த வாக்குகள்: 4,81,29,325
4 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற மொத்த வாக்குகள்: 4,90,69,462
தேர்தல் அரசியல் என்பது சொற்ப வாக்கு சதவீதத் தில் பெரும் வெற்றியைத் தரக் கூடியதுதான். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசைவிட 8 விழுக்காடு மட்டுமே கூடுதலாக வாக்கு பெற்ற பாஜக கூடுதலாக 99 இடங் களை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment