நாட்டை தவறாக வழி நடத்தும் ஒன்றிய நிதியமைச்சர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 13, 2023

நாட்டை தவறாக வழி நடத்தும் ஒன்றிய நிதியமைச்சர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

featured image

பெரும்பாவூர், டிச.13- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. ஒன்றிய நிதி அமைச்சர் நாட்டை தவ றாக வழி நடத்துகிறார்.
மாநிலத்திற்கு 100 சத விகித ஜிஎஸ்டியும், 50 சதவிகித அய்ஜிஎஸ்டி (ஒருங்கிணைந்த சரக்கு விற்பனை வரி)யும் கிடைக் கும் என்று மாநிலங்கள வையில் ஒன்றிய நிதி அமைச்சர் கூறி னார்.
இது தவறான புரிதலை பரப்புவதற்காக திட்ட மிட்டு சொல்லப்பட்ட அரசியல் அறிக்கை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.
பெரும்பாவூர் தொகுதி புதிய கேரளம் அரங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது:

ஜிஎஸ்டியின் ஒரு பகுதியாக வருவாயில் 50 சதவிகிதம் மாநிலங்களின் வரி வருவாயாகும். ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்டபோது, மாநி லங்கள் 44 சதவிகித வரி உரிமை களை இழந்தன.
ஜிஎஸ்டி இழப் பீட்டை ஈடு செய்வதாக ஒன்றிய அரசு தெரிவித் தது. அய்ந்து ஆண்டுகளுக் குப் பிறகு இது முடிவுக்கு வந்தது.

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ஒன்றிய அரசின் நிதியில் இருந்து வழங்கப் படுவதில்லை. மாறாக, தனி செஸ் விதிப்பதன் மூலம் மாநிலத்திடம் இருந்து வசூலிக்கப்படு கிறது.
இழப்பீட்டின் மீதான செஸ் வரியை ஒன்றிய அரசு இன்னும் வசூலித்து வருகிறது. ஜிஎஸ்டிக்கு முன்பும் அதன் அமலாக் கத்தின் போதும் வரு வாய் நடுநிலை விகிதம் 16 சதவிகிதமாக இருந்தது.

இப்போது அது 11 சதவிகிதமாக உள்ளது. 35-45 சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட 200க்கும் மேற் பட்ட பொருட்கள், ஜிஎஸ்டி வந்ததும் 28 சதவிகிதமாக குறைக்கப் பட்டது. மக்களவைத் தேர்தல் வந்ததும் மீண்டும் வரி குறைக்கப்பட்டது. இப்போது அது 18 சத விகிதமாக உள்ளது.

வரி குறைப்பால் இந்த பொருட்களின் விலை குறையவில்லை. மக்க ளுக்கு பலன் கிடைக் காதது மட்டுமின்றி, மாநிலங்களின் வரி வரு வாயிலும் பெரும் இழப்பு ஏற்பட் டது.
ஜிஎஸ்டி பங்கை நிர் ணயிப்பதில் தெளி வின்மை உள்ளது. ஒன்றிய – மாநில நிதி பரிமாற் றங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை. வெளிப் படைத்தன்மைக்கு, ஜிஎஸ்டி மூலம் வசூலிக் கப்படும் தொகையை ஒன்றிய அரசு தெளிவு படுத்த வேண்டும். ஒன்றிய அரசு அதிக அளவில் செலவழிப் பதாகக் கூறப் படுகிறது.
15 ஆவது நிதி ஆயோக் அறிக்கையின்படி, மொத்த செலவில் 62.4 சதவிகிதம் மாநி லங்களால் ஏற்கப்படுகிறது. ஆனால், 62.2 சதவிகிதம் வருவாய் ஒன்றிய அரசுக்கு செல் கிறது. இந்த உண்மையை ஒன்றிய நிதி அமைச்சர் மறைத்துள்ளார்.

கேரளத்தின் கடன் வரம்பை குறைக்கும் நட வடிக்கையையும் ஒன்றிய அரசு மேற்கொண்டுள் ளது. 10ஆவது நிதி ஆயோக் காலகட் டத்தில் மாநில பங்கு 3.875 சத விகிதமாக இருந்தது.
15ஆம் நிதி ஆணை யத்தின் கால கட் டத்தில் 1.92 சதவிகிதமானது. பாதிக்கு மேல் வெட்டிக் குறைத்துவிட்டு அதிகம் பெறுவதாக ஒன்றிய நிதி யமைச்சர் வாதம் செய் கிறார் என்றார் முதல மைச்சர்.

No comments:

Post a Comment