மாணவர்களை நல்வழிப்படுத்த காவல்துறை மூலம் அறிவுரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 13, 2023

மாணவர்களை நல்வழிப்படுத்த காவல்துறை மூலம் அறிவுரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

featured image

பொன்னேரி, டிச.13 பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலை பள் ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி நேற்று (12.12.2023) ஆய்வு செய்தார். அப்போது, வகுப்பறைக்குள் சென்ற அமைச்சர் மாணவர்களுடன் கலந்துரையாடி னார். இதனை தொடர்ந்து, பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள் குறித்து தலைமை ஆசிரியையிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், பள்ளிகள் அனைத்தும் தன்னிறைவு பெற வேண்டும் என்ற அடிப்படையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 18,000 வகுப்பறைகளை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டிட முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். கடந்த 2 மாதங் களுக்கு முன்பு முதலமைச்சர் 1,000 வகுப்பறைகளை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்நிலையில் மேலும், 1,000 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட் டுள்ளன. விரைவில் அந்த வகுப் பறைகளும் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும். மாணவர் களை நல்வழிப்படுத்த ஆசிரி யர்கள், காவல்துறை, தன்னார் வலர்கள் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாண வர்களை குற்றவாளிகளைப் போல பார்க்க முடியாது. கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் மாணவர்களை நல்வழிப்படுத்து வோம் என்றார். இந்த ஆய்வின் போது, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்த ராசன், முதன்மைக் கல்வி அலு வலர் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் முகமது அப் துல்லா, ஜாக்டோ ஜியோ மாநில தலைவர் காத்தவராயன் ஆகி யோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் உள்ள சிற்பி கலைக்கூடத்தில், திருச்சியில் வைப்பதற்காக தயாராக உள்ள கலைஞரின் முழு உருவ சிலையை பார்வையிட்டு சிலை குறித்து ஆலோசனை செய்தார். பின்னர் வல்லூரில் உள்ள திமுக அலுவலகத்தில் ஒன்றியச் செயலாளர் வல்லூர் ரமேஷ் ராஜ் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த நிவாரண உதவிகளை திருநங்கை களுக்கு அமைச்சர் வழங்கினார். இதனை யடுத்து அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் பொது மக்களுக்கும் நிவாரணப் பொருட் களை வழங்கினார்.

No comments:

Post a Comment