சென்னை, டிச. 10 – மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான, தமிழ்நாடு அரசின் நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
‘மிக்ஜம்’ புயலால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை யால் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாயினர். ஏறத்தாழ ஒருவார காலம் ஆன பிறகும் இன்னமும் பல பகுதிகளில் இயல்புநிலை திரும்பவில்லை.
பல்லாயிரக்கணக்கான ஏக்க ரில் கதிர் வரும் நிலையிலிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவ சாயிகள் செய்வ தறியாது திகைத்து நின்றனர். இந்த நிலையில், பாதிக் கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தமிழ்நாடு அரசு நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளி யிட்டுள் ளதை தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வரவேற்கிறது.
கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடந்த காலத்தில் வழங் கப்பட்ட நிவாரணத்தொகை அனை த்து இனங்களிலும் உயர்த்தப்பட்டி ருப்பது வரவேற்கத்தக்க நடவ டிக்கையாகும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அனைத்துப் பயிர்களுக்கும் நிவாரணம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண் டும்.
ஒன்றிய பாஜக அரசு புயல் நிவாரணப் பணி களுக்காக தமிழ்நாடு அரசு கோரியுள்ள தொகையை முழுமையாகவும், தாமதமில்லாமலும் வழங்க முன்வர வேண்டு மென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.
No comments:
Post a Comment