கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 1, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.12.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉 கனடா குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத் தில், இந்திய அரசின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருக்கிறார்கள்' என்ற கனடாவின் குற்றச்சாட்டு, இந்தியா - கனடாவுக் கிடையே பெரும் உறவுச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவுத் தலைவரும், அமெரிக்கா-கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவரைக் கொலைசெய்ய சதித்திட்டம் நடைபெற்ற தாகவும், அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் கூறுகிறது. இந்தியா தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉ஏழைகளுக்கு சிறந்த மருத்துவம் இன்னமும் கிடைக்க வில்லை; ராஜஸ்தான் மாநில சுகாதாரத் திட்டம் சிறப்பானது. அதனை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த வேண்டும், ராகுல் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉மோடி அரசின் தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் ஹிந்து கடவுள் படம் மற்றும் இந்தியா என்பது நீக்கப்பட்டு பாரத் என மாற்றம் - மருத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு.

தி டெலிகிராப்:

👉 மோடி அரசின் விளம்பர வாகனம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரங்பூர் கிராமத்திற்கு வந்த போது, 4500 பேர் கொண்ட அந்த கிராமத்தில் 200 பேர் மட்டுமே அதைக் காண வருவதா? கிராம அதிகாரி மீது பிரதமர் மோடி காட்டம்.

👉 உ.பி.யில் எஸ்சி/எஸ்டிக்கான கல்வித் திட்டத்தை திரும்பப் பெற்றதைக் கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சி வெளிநடப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

றீ ராஜஸ்தானின் கோட்டா பயிற்சி மய்யத்தில் நீட் பயிற்சிக்கு சென்ற மாணவி தற்கொலை. இந்த வாரத்தில் இது இரண்டாவது தற்கொலை மற்றும் இந்த ஆண்டு 26ஆவது மாணவர் தற்கொலை.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment