கைரேகை வழங்க முடியாதவர்களுக்கு கருவிழி பதிவு மூலம் ஆதார் வழங்கலாம்: புதிய தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

கைரேகை வழங்க முடியாதவர்களுக்கு கருவிழி பதிவு மூலம் ஆதார் வழங்கலாம்: புதிய தகவல்

featured image

புதுடில்லி, டிச. 10- கைரேகை வழங்க இயலாதவர்களுக்கு கருவிழி பதிவு மூலம் ஆதார் வழங்கலாம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
ஆதார் அட்டை பெறுவதற்காக பதிவு செய்பவர்களுக்கு கைவிரல் ரேகை மற்றும் கருவிழி பதிவு போன்றவை பெறப்படுகிறது.
ஆனால் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கைவிரல்கள் இல்லாத தால் அவருக்கு ஆதார் கார்டு வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப இணைய மைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அந்த பெண்ணின் கரு விழி பதிவு மட்டும் பெற்றுக் கொண்டு

ஆதார் அட்டை வழங்க ஆதார் ஆணை யத்தை சேர்ந்த அதிகாரிகள் அந்த பெண் வீட்டுக்குநேரில்சென்று ஆதார் எண்ணை வழங்கினர்.
வழிகாட்டுதல் வெளியீடு

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆதார் பதிவு மய்யங்களுக்கு இது தொடர்பான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு வழங்கி இருக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்ட இருப்பதாவது,

ஆதார் அட்டை பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஒருவர் கைரேகை வழங்குவதற்கு இயலாவிட்டால், அவரது கருவிழியைப் பதிவு செய்து கொண்டு ஆதார் அட்டை வழங்கப்பட வேண்டும்.
இதைப்போல கருவிழி பதிவு வழங்க முடியாதவருக்கு கைவிரல் ரேகையை பதிவு செய்துகொண்டு ஆதார் வழங்கலாம்.
அதேநேரம் ஏதாவது கார ணத்தால் இந்த இரண்டை யும் வழங்கமுடியாதவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட வேண்டும்.
விரல்ரேகை மற்றும் கருவிழி பதிவு இரண்டையும் வழங்க முடி யாத நபரின் பெயர், பாலினம், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
விரல்கள் அல்லது கருவிழி அல்லது இரண்டும் கிடைக்காததை முன்னிலைப்படுத்த வழிகாட்டு தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் ஒளிப்படம் எடுக்கப் பட்டு, ஆதார் பதிவு மய்யத்தின் மேற்பார்வையாளர் அத்தகைய பதிவை சரிபார்க்க வேண்டும்.

தேவையான தகவல்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஒவ் வொரு தகுதியான நபருக்கும் பயோமெட் ரிக் (கைரேகை, கருவிழி பதிவு) வழங்க இயலாமையைப் பொருட் படுத்தாமல், ஆதார் எண் வழங் கலாம்.

ஆதார் ஆணையம் ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 பேரை மேற் கூறிய விதிவிலக்கான பதிவுகளின் கீழ் பதிவு செய்கிறது.
அந்தவகையில் விரல்கள் இல்லாமை அல்லது ரேகை வழங்க இயலாமை மற்றும் கருவிழி இல்லாமை அல்லது 2 வழிகளும் இல்லாதவர்கள் என சுமார் 29 லட்சம்பேருக்கு இதுவரை ஆதார் எண்கள் வழங்கப்பட்டு உள்ளன

– இவ்வாறு ஒன்றிய அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment