வட சென்னையில் புதிய அனல் மின் நிலையம் ஜனவரியில் செயல்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 21, 2023

வட சென்னையில் புதிய அனல் மின் நிலையம் ஜனவரியில் செயல்படும்

featured image

சென்னை, டிச.21 வட சென்னை, அத்திப்பட்டில் கட்டப்பட்டு வரும் 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையம் வரும் ஜனவரி மாதம் முதல் செயல்படத் தொடங்க உள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி சராசரி மின்தேவை 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 8 ஆயிரம் மெகாவாட் அள வுக்கு குறைந்தும், கோடைக் காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அள வுக்கு உயர்ந்தும் காணப் படும். மின் தேவையைப் பூர்த்திசெய்ய மின்வாரி யம் தனது சொந்த உற்பத் தியைத் தவிர, தனியார் காற்றாலை நிறுவனங்கள், ஒன்றிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களி டம் இருந்து கொள்முதல் செய்கிறது.

இந்நிலையில், மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தமிழ்நாடு மின்வாரியம் வடசென் னையில் உள்ள அத்திப் பட்டில் 800 மெகாவாட் திறனில் புதிய அனல்மின் நிலை யத்தைக் கட்டி வருகிறது. ரூ.6,500 கோடி செலவில் கட்டப்படும் இந்த அனல் மின் நிலை யத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் மின்னுற் பத்தி தொடங்கப்படுகிறது.
கரோனா தொற்றால் தாமதம்: கடந்த 2019-ஆம் ஆண்டே இந்த அனல் மின் நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா தொற்று காரணமாக ஏற் பட்ட பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திறப்ப தில் அதிக தாமதம் ஏற் பட்டது. இந்த அனல்மின் நிலையத்துக்குத் தேவை யான நிலக்கரி ஒடிசா மாநிலம் தால்ச்சர், அய்.பி. வேலி ஆகிய சுரங்கங்கள் மற்றும் தெலங்கானா மாநிலம் சிங்கரேனி ஆகிய சுரங்கங்களில் இருந்து கொண்டு வரப் பட உள்ளது.

6 சதவீத நிலக்கரி இறக்குமதி: இவை தவிர, ஒடிசா மாநிலம் மகாநதி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வழங்குமாறும் மத்திய அரசிடம் கோ ரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. மேலும், வெளிநாடு களில் இருந்து 6 சதவீதம் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி யையும் ஒன்றிய அரசிட மிருந்து மின்வாரியம் பெற்றுள்ளது. இதன் மூலம், இந்த அனல் மின்நிலையம் முழு அள வில் செயல் படத் தொடங்கும். அத்துடன், இந்த மின்நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் வரும் கோடைக் காலத் தில் மின்தேவையை சிரமமின்றி பூர்த்தி செய்ய முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment