சென்னை, டிச.26 சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60-ஆவது வார்டு, அன்னை சத்யா நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மாநகராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரம் டன் குப்பைகள் சேக ரிக்கப்பட்டு அப்புறப்படுத்தம் பணிதொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த டிச.6 முதல் 24-ம்தேதி வரை 1,34,606 டன் குப்பைக் கழிவுகள் மற்றும் 9,604 டன் தோட்டக் கழிவுகள் என மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 210 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
டிச.1 முதல் 24-ஆம் தேதி வரை 9,969 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 5 ,64,958 பேர் பயனடைந்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழைக்கு பிறகு எந்தவொரு தொற்று நோயும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் கவனக் குறைவாக இருக்கக் கூடாது என்ற காரணத்தால் சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் கனமழை காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை கணக் கெடுத்து அவற்றை சீர்செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3,873 சாலைகளில் 9,307 சாலைப் பள்ளங்கள் கண்டயறியப்பட்டு 4,162 பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள் ளன. மீதமுள்ள பள்ளங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment