வெள்ளத்தால் வாக்காளர் அட்டை பாதிப்பா? மீண்டும் விண்ணப்பிக்கலாம் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 13, 2023

வெள்ளத்தால் வாக்காளர் அட்டை பாதிப்பா? மீண்டும் விண்ணப்பிக்கலாம் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு தகவல்

சென்னை, டிச. 13- வெள்ளத்தில் வாக் காளர் அடையாள அட் டையை தவறவிட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்து புதிய அட்டை பெறலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில், பதிவு செய் யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தங்களுடைய செலவினங்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் நடை முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (12.12.2023) நடந்தது.

நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கலந்து கொண்டார். அப்போது, தமிழ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு செலவினங்களை எவ் வாறு இணையதளத்தில் பதிவேற்றுவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகு செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப் படாத கட்சிகள் உள்ளது. இது வரை அங்கீகரிக்கப்படாத கட்சி கள் செலவினங்களை தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் நேரடியாக வந்துகொடுப்பார்கள். தற்போது இந்திய தேர்தல் ஆணை யம் இணையதளம் மூலமாக தங் களுடைய வரவு, செலவு விவரங் களை பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது.
பேப்பர் மூலம் கொடுக்கும் போது சில சிக்கல்கள் இருந்தது. எனவே, இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந் துள்ளது. அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கூட் டம் நடைபெற்றுள்ளது. மேலும், ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக் காளர் பட்டியல் வெளியிடப்படும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம். செங்கல்பட்டு மாவட்டங் களில் உள்ளவர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டிருந்தால் தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் இலவசமாக பதிவு செய்யலாம். அவர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் புதிய வாக்காளர் அடை யாள அட்டை அனுப்பப்படும்.
-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment