பெங்களூரு, டிச.8 கருநாடகாவில் பத்திரிகை யாளர், எழுத்தாளர் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட் டுள்ளதாக முதலமைச்சர் சித் தராமையா கூறினார்.
கருநாடகாவை சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்துத்துவ அமைப்பின ரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக கருநாடகா மற்றும் மகாராட்டிராவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் கருநாடக முதலமைச்சர் சித்த ராமையா வெளியிட்ட அறிக்கையில், ‘‘எழுத் தாளர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் இருவரின் கொலை வழக்கு களையும் விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தர விடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். சித்தராமையாவின் இந்த உத்தரவுக்கு கவுரி லங்கேஷின் சகோதரி கவிதா லங்கேஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன்மூலம் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப் படுவார்கள் எனவும்அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment