புதுச்சேரி, டிச.27- புரட்சிக்கவிஞர் பெயரன் கவிஞர் கோ. செல்வம் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டு இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
புரட்சிக்கவிஞர் பெயரன் கோ. செல்வம் 25-12-2023 அன்று அவரின் திடீர் மறைவையொட்டி புதுச்சேரி எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள அவருடைய இல்லத்தில் உடல் வைக் கப்பட்டு இருந்தது.
தலைமைக் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி ஆகியோர் பங்கேற்று, அமைதி ஊர்வலமாகச் சென்று கவிஞர் கோ.செல்வம் உடலுக்கு மலர் வளையம்வைத்து வீரவணக்க முழக்கத் துடன் இறுதி மரியாதைச் செலுத்தப் பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், செயலாளர் கி.அறி வழகன், மாநில ப.க அமைப்பாளர் கு.இரஞ்சித் குமார், பொதுக்குழு உறுப் பினர்கள் லோ.பழனி, விலாசினி இராசு, காப்பாளர் இரா. இராசு, பொதுச் செயலாளருடன் வருகை புரிந்த கலைவாணன், அறிவின் ஒளி, வீர சுந்தர், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், துணைத் தலைவர் மு.குப்புசாமி, நகராட்சி தலைவர்கள் மு.ஆறுமுகம், செ. இளங் கோவன், கு.உலகநாதன் சு.துளசி ராமன், எஸ். கிருஷ்ணசாமி, நகராட்சி செயலாளர்கள் இரா.ஆதிநாராய ணன், களஞ்சியம் வெங்கடேசன், இளைஞரணித் தலைவர் தி.இராசா, எழுத்தாளர் சீனு. தமிழ் நெஞ்சன், புதுச்சேரி தெ.தியாகு, தேவிகா தியாகு, முகமது நிஜாம்,பெ.ஆதிநாராயணன், இளைஞரணி தோழர் ச.சித்தார்தன், வள்ளுவர் நெறிமன்றம் சண்முகம் மற்றும் தோழர்கள் கலந்து கொண் டனர். இறுதியாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி திராவிடர் கழகத் தலை வர் சிவ. வீரமணி உட்பட பல்வேறு சமூக அமைப்பு தலைவர்களும், பொறுப் பாளர்களும் இரங்களுரை நிகழ்த்தி னார்கள். மாவட்டத் தலைவர் வே.அன் பரசன் நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார்.
ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்ட கோ.செல்வம் அவர்களின் உடல் புதுச்சேரியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று முத்தியால் பேட்டை, பாப்பம்மா கோயில், பாவேந்தர் நினைவிடம் சென்றது.
அங்கு கோ.செல்வம் அவர்களது உடல் பாவேந்தர் நினைவிடம் அருகில் புதைக்கப்பட்டது. திராவிடர் கழகத் தோழர்கள் வீர முழக்கமிட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
தலைமைக் கழகம் சார்பில் ஆசிரியர் அவர்களால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தி நகல் எடுத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment