- கோ.வா.அண்ணா ரவி, தொருவளூர்
எண்ணும் பொழுதும்
நினைக்கும் பொழுதும்
பேசும் பொழுதும்
தமிழர் உயர்வெனவே
வாழ்கிறாய்!
வேரறியா மலர் போல
வாழுகிறத் தமிழற்காக
நாளும் உழைக்கிறாய்
தன்னலமில்லா ஞாயிறாக
தமிழகத்தை உன்
காலடியால் அளந்தாய்
ஆரியத்தால் விளைகின்ற
களைதனையே களைந்தாய்
வீசும் காற்றிலும்
ஆரியம் விஷத்தை கலக்கும்
என்பதை நீயே அறிந்தாய்
கண் துஞ்சாமல்
காலமெல்லாம்
கங்காணியாய் உழைத்தாய்
உன் வயதை
விரல் விட்டு எண்ணியெண்ணி
ஆரியம் தோற்றது!
பெரியார் கைப்பிடித்த
நாள் முதலாய் - உன்
கணிப்பே வென்றது.
அகவை எதுவானாலும்
இருக்கட்டும்
அகிலம் மகிழ - உன்
சிந்தனையே உயிராக
இருக்கட்டும்.
பார்ப்பான் உனக்கு
பாடைகட்டி பார்த்தான் - நீயோ
படை நடத்தி
நாட்டை வழிநடத்திச் சென்றாய்!
ஏவுகணை என்றாலும்
அஞ்சுவதில்லை - தமிழ் கழனியில்
ஒளிவெள்ளமாய் நீ பாயாமல்
இருந்ததும் இல்லை!
நீர் வாழ்க! வாழ்க!
வென்றே வாழ்த்துகிறோம்
தமிழர் வாழ உன் நிழலில்
தஞ்சம் கேட்கின்றோம்!
No comments:
Post a Comment