தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.12.2023) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 155.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறை கட்டடங்கள், மாநிலத்தின் 21 மாவட்டங்களில் 20.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 24.39 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 102 ஊராட்சி மன்றக் கட்டடங்கள் மற்றும் 15.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர். காந்தி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா. பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tuesday, December 26, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment