புத்தாக்க தொழில்நுட்பத்தில் வேளாண் வாகனங்கள் தயாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

புத்தாக்க தொழில்நுட்பத்தில் வேளாண் வாகனங்கள் தயாரிப்பு

சென்னை, டிச.10 - வேளாண் சார்ந்த பணிகளில் மிகச் சிறப்பான கருவிகளைத் தயாரித்து வருவ தோடு விவசாயிகள் அதிகம் விரும் பும் ஹெவி டூட்டி டிராக்டர்களையும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

இந்நிறுவனம் டிராக்டர்களை, மண்ணின் தன்மைக்கேற்ப தயா ரித்து அளிப்பதால், விற்பனை சந்தையில் முன்னெப்போதையும் விட சாதனை அளவாக 16.3% சந் தையை நவம்பர் 2023இ-ல் பிடித் துள்ளது.

இதுகுறித்து இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத் தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில், இத் தகைய சாதனை வளர்ச்சிக்கு விவ சாயிகளிடம் நிறுவனம் மேற் கொண்ட அணுகுமுறையும் காரணமாகும்.

இத்துறை வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் டிராக்டர் விற்பனை யில் நிலவும் போட்டிச் சூழலில் நிறுவனம் இத்தகைய வளர்ச்சியை எட்டியிருப்பது விவசாயிகள் நிறு வனத் தயாரிப்புகளுக்கு அளித் துள்ள அங்கீகாரத்தைக் காட்டுகிறது.

மேலும் தயாரிப்புகளுக்கு நியா யமான விலையை நிர்ணயித் ததும் உரிய தொழில்நுட்பத்தைப் பின் பற்றியதும் விவசாயிகளுக்குத் தேவையான நேரத்தில் கிடைப் பதற்கு வசதியாக நாடு முழுவதும் விநியோகஸ்தர்களை வைத்திருந்த தும் முக்கியக் காரணங்களாகும்” என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment