கூடங்குளத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு மின்சாரம் தரப்பட உள்ளது? ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 11, 2023

கூடங்குளத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு மின்சாரம் தரப்பட உள்ளது? ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் கடிதம்

சென்னை,டிச.11- கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தற்போது தலா 1,000 மெகாவாட் திறனில் 2 அணு உலைகளில் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழ் நாட்டுக்கு தினமும் 1,152 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் விலை ரூ.3.50 முதல் ரூ.4 வரை உள்ளது.
அங்கு தலா 1,000 மெகாவாட் திறனில், மேலும் 4 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், 3 மற்றும் 4-ஆவது உலை களில் உற் பத்தி செய்யப்பட உள்ள மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கு வழங் குமாறு ஒன்றிய மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு கடிதம் எழுதியது. அதற்கு, 2 உலைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு 50 சதவீத மின்சாரம் வழங்க உள்ள தாகவும், மற்ற மாநிலங்களுக்கு ஒதுக் கியது போக எஞ்சியுள்ள மின்சாரத் தையும் சேர்த்து வழங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்தது.
எனவே, கூடங்குளம் 3, 4, 5, 6ஆகிய அணு உலைகளில் இருந்து தமிழ் நாட்டுக்கு எவ்வளவு மின்சாரம் ஒதுக்கப்படும், மின்கொள்முதல் விலை ஆகிய விவரங்களை தெரிவிக் குமாறு, மத்திய மின்துறை செய லருக்கு தமிழ்நாடு மின்வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment