அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாயார் மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைப்பேசியில் இரங்கல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 22, 2023

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாயார் மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைப்பேசியில் இரங்கல்!

featured image

தமிழ்நாடு வருவாய் மற் றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் அவர்களின் தாயார் ஆர்.அமராவதி (வயது 94) அம்மையார் விருதுநகரில் நேற்றிரவு (21.12.2023) மறை வுற்றார். மறைவுச் செய்தியை அறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், இன்று (22.12.2023) காலை அமைச்சரோடு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.

தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, விருதுநகர் மாவட்டத் தலைவர் நல்லதம்பி, மாவட்டச் செயலாளர் ஆதவன் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளிட்டோர் அம்மையாரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

இன்று மாலை இறுதி நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

No comments:

Post a Comment