திராவிடர் கழகம் போன்று தேர்தலில் நிற்காத இயக்கம் உலகில் வேறு எங்கும் இல்லை. அதேபோல், அதன் தலைவராக உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் போன்ற தலைவரையும் வேறு எங்கும் பார்க்க முடியாது!
இன்று (2.12.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள். 91 ஆண்டுகளில் 81 ஆண்டுகள் பொதுவாழ்க்கைப் பணி; 61 ஆண்டுகள் ‘விடுதலை’ ஆசிரியர் பணி என்பன வேறு எவருக்கும் இல்லாத் தனிச் சிறப்பு!
தமிழ்நாட்டைப்பற்றியும், தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் ஒவ்வொரு நொடியும் சிந்தித்துக் கொண்டிருப்பவர் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
தோழர்களைத் தன் உயிருக்கும் மேலாக நேசிப்பவர். பெரியார் பெருந்தொண்டர்களை அவர்தம் இல்லம் சென்று சந்தித்து அவர்களது உடல்நலம்குறித்து அறிந்துகொண்டு, தக்க ஆலோசனைகளைக் கூறுபவர்.
பெரியார் திடலில் பணிபுரியும் தோழர்களை ‘‘பணித் தோழர்கள் - கூட்டுப் பணியாளர்கள்’’ என்று சொல்லி, அவர்களுக்குப் பெருமை சேர்ப்பவர். ‘‘ஆண்டிற்கு ஒருமுறையோ, இருமுறையோ மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்'' என்று கழகத் தோழர்களிடம் அறிவுறுத்துபவர். அவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கு முன்பும் பெரியார் திடல் பணித் தோழர்களுக்கு மருத்துவப் பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்பவர்.
எந்தப் பணியையும் சலிப்பின்றி, தொய்வின்றி உடனுக்குடன் (91 வயதிலும்) செய்வதில் தமிழர் தலைவருக்கு நிகர் - அவரே!
தந்தை பெரியார் கண்டெடுத்த விலைமதிப்பில்லா முத்து - அவரே உலகத் தமிழர்களின் சொத்து!
தேனா. ச.பாஸ்கர், சென்னை-14
No comments:
Post a Comment