ஊற்றங்கரை, டிச. 13- விடுதலை வாசகர் வட்டம் மற்றும் ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகம் இணைந்து ஊற்றங் கரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நகரில் அமைந்துள்ள சேகர் அரங்கத்தில் 3.12.2023 ஞாயிறு காலை 10 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கருத் தரங்கம் எழுச்சிகரமாக உணர்வுப்பூர் வமாக நடைபெற்றது.
ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் செ.பொன்முடி அனை வரையும் வரவேற்று உரையாற்றி நிகழ் வினை தொடங்கி வைத்தார். தலைமை கழக அமைப்பாளர் கோ.திராவிடமணி நிகழ்விற்கு தலைமை தாங்கி தலைமை உரையினை நிகழ்த்தினார். அவர் தனது தலைமை உரையில் தமிழர் தலைவர் அவர்களின் தனித்துவமான செயல் பாடுகள் குறித்து சிறப்பான உரையினை நிகழ்த்தினார்.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கத் தின் துணைத் தலைவர் பெ.இராமசாமி, விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் வழக்குரைஞர் ந.ஜெயசீலன் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
அண்மையில் மறைவுற்ற பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம் மையார் அவர்களின் படத்தினை மேனாள் பெரியார் சமூகக் காப் பணியின் பயிற்றுநரும், திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளருமான வெ.அழகுமணி திறந்து வைத்து உரை யாற்றினர்.
அவர் தனது உரையில் க.பார்வதி அம்மையார் மாநில மகளிரணி செயலாளராக செயலாற்றிய காலத்தில் அவருடன் இணைந்து ஆற்றிய இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்து ஊற்றங் கரையில் வெகு சிறப்புடன் நடைபெற்ற பாலியல் நீதி மாநாட்டில் அவரின் பங்களிப்பையும் வழிக்காட்டலையும் சுட்டிக் காட்டி அவர் ஆற்றிய உரை மிக உருக்கமாக இருந்தது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கருத்தரங்க சிறப்புரையாக “தகை சால் தலைவர் ” என்னும் தலைப்பில் மிக சிறப்பான உரையை திராவிடர் கழக தலைமைக் கழக சொற்பொழி வாளர் பழ.வெங்கடாசலம் நிகழ்த்தி னார். தந்தை பெரியாருக்குப் பின் தமி ழர் தலைவர் தலைமையில் இயக்கத்தின் மகத்தான செயல்பாடுகள் குறித்தும் தமிழர் தலைவரின் தலைமைப் பண்பு கள் குறித்தும் தனது பல்வேறு அனுப வங்களை இணைத்து உரையாற்றினார்.
நிகழ்வில் ஏழுஞாயிறு, குப்புசாமி, விரியுரையாளர் இரமேஷ் ,தண்டபாணி க.திருப்பதி, பொன்னுசாமி, குட்டிமணி வசந்தமல்லி, செம்மொழி, இசைமொழி, துரைராஜ் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்ட நிகழ்வை ஊற்றங்கரை ஒன்றிய திராவி டர் கழக செயலாளர் செ.சிவராஜ் ஒருங் கிணைக்க, விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment