2023ஆம் ஆண்டின் ஆசிரியர்
அறிக்கைகள் – ஆய்வுக் கருத்தரங்கம்
தருமபுரி மாவட்ட மகளிர் அணி – மகளிர் பாசறை கூட்டத்தில் முடிவு
தருமபுரி, டிச. 7- தருமபுரி மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்து ரையாடல் கூட்டம் 13.11.2023 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் நளினி கதிர் தலைமையேற்றார்.
மகளிர் அணி துணைச் செயலாளர் அருணா பீமன் அனைவரையும் வரவேற்றார்.
தலைமைக் கழக அமைப் பாளர் ஊமை ஜெய ராமன், மாவட்டத் தலைவர் காமலாபுரம் கு.சரவணன் கழக காப்பா ளர் அ. தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் க.கதிர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினர். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி வழிகாட்டுதல் உரை வழங்கினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலை வர் பிறந்த நாளை மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக சிறப்பாக கொண்டாடுவது எனவும், விடுதலை இதழில் மிகச் சிறப்பான ஒரு சமூக நீதி வரலாறாக வந்து கொண் டிருக்கும் 2023ஆம் ஆண் டின் ஆசிரியர் அறிக்கை கள் குறித்த – ஒரு ஆய்வுக் கருத்தரங்கம் நடத்துவ தெனவும், தமிழர் தலை வர் அவர்களின் வழிகாட் டுதல்படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவதென வும், வாய்ப்புள்ள இடங் களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப் பினை ஒட்டி வைக்கம் நூற்றாண்டு விழா கலை ஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும், மக ளிர் அணி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள ‘பெரியார் பிஞ்சு’ மற்றும் ‘விடுதலை’ இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது எனவும், கிளை, ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பாளர் களை நியமிப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய ப.க. பொறுப் பாளர் பெ.சகுந்தலா, சிகாமணி, ஜெயலட்சுமி, நிஷா, சரளா, படிப்பக உதவியாளர் அருணா அசோக் மற்றும் சிவாடி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment