அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தாக்கீது மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 26, 2023

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தாக்கீது மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் நடவடிக்கை

மதுரை டிச 26 அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது பதியப்பட்ட வழக்கில் விசாரணையை துரிதப்படுத்தி யுள்ளது மதுரை காவல் துறை.
திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு. இவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் தவிர்க்க, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த 1ஆம் தேதி கைது செய்தனர். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை உயரதிகாரியின் உத்தரவின்பேரில் மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் அப்பிரிவு காவல்துறையினர் சென்ற போது, அவர்களை அமலாக்கத் துறை யினர் அனுமதிக்க மறுத்து வாக்குவாதம் செய்தனர்.

ந்நிலையில், மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத் தில் பணிபுரியும் உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால், தமிழ்நாடுகாவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பிய புகாரில், ‘மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எனக் கூறி அத்துமீறி நுழைந்தவர்கள் மீதும், தேவையின்றி ஆவணங்களை திருடி சென்றவர்கள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதே நேரத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும், காவல்துறை கண்காணிப்பாளர் சத்ய சீலன் மதுரை தல்லாகுளம் காவல் நிலை யத் தில் அமலாக்கத் துறையினருக்கு எதி ராக ஒரு புகாரை கொடுத்தார். இந்தப் புகார் தொடர்பாக அதிகாரிகளை அர சுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள், ஊழி யர்கள் (பெயர் குறிப்பிடாமல்) மீது தல்லா குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், இது தொடர்பாக அமலாக் கத் துறையினருக்கும் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரு 2 தரப் பிலும் மாறி, மாறி புகார்கள் அளிக்கப் பட்டதால் விசாரணையை தல்லாகுளம் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ள னர். ஏற்கெ னவே அமலாக்கத் துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், தற்போது இந்த விவகாரமும் சூடுபிடித்துள்ளது. காவல் துறையினர் தரப்பில் கேட்டபோது, ‘லஞ்சம் வாங்கிய அங்கித் திவாரியின் கைதை தொடர்ந்து மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு முறையான அனுமதியை பெற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைக்கு சென்ற போதிலும் உள்ளே விடாமல் தடுத்தும், அரசு பணி செய்யவிடாமலும் வாக்குவாதம் செய்த அமலாக்கத் துறையினர் மீது பெயர் குறிப்பிடாமல் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்தாலும், இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறையினருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நாளை (டிச., 26) விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். விசாரணைக்குப் பிறகு பணி செய்ய விடாமல் தடுத்த அமலாக்கத் துறை யினரின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப் படும். அதேநேரத்தில் அமலாக்கத் துறை சார்பில், காவல்துறை தலைமை இயக் குநரிடம் கொடுத்த புகாரிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்ந்த ஒரு சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment