21 பேர் தலைகளைத் துண்டித்த கொலைவெறி சாமியார்-
பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி சொத்து அபகரிப்பு
திருப்பதி, டிச.13- ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் சத்யம் (வயது 42). தான், மந்திரவாதி எனவும், பில்லி சூனியம் நீக்குவதாகவும் கூறி வந்தார்.
மேலும் திடீர் ‘அதிர்ஷ்டம்’, வேலை வாய்ப்பு, திருமணத்தடை, சொத்து கைவசப்படுத்துவது, வசியம் செய்வது, மந்திர பூஜையால் எந்த விஷயத்தையும் நடத்தி காட்டுவ தாகவும் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளார்.
இந்த நிலையில் அய்தராபாத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒரு வர் திடீரென காணாமல் போனார். இது குறித்து அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் ரியல் எஸ்டேட் அதிபர் கடைசியாக சந்தித்த நபர்கள் குறித்து விசாரணையில் இறங்கினர்.
அப்போது ரியல் எஸ்டேட் அதி பர் சாமியார் சத்தியத்துடன் தொடர் பிலிருந்தது தெரியவந்தது சாமியாரை பிடித்து காவல்துறையினர் விசா ரணை நடத்தினர். அதில் சாமியார் ரியல் எஸ்டேட் அதிபரை தலை துண்டித்து கொலை செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் சொத்து அப கரித்தது தெரியவந்தது. தொடர்ந்து சாமியாரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சாமியார் சத்தியம் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. சாமியார் சத்தியம் தன்னிடம் பில்லி, சூனியம் நீக்குவதற்காக பூஜை செய்ய வருப வர்கள் குறித்த பின்னணியை அறிந்து கொண்டுள்ளார்.
அவர்களை தனியாக வர வழைத்து அதிக பணம் நகை வாங்கி யுள்ளார். பின்னர் அவர்களை தலை துண்டித்து கொலை செய்துள்ளார்.
அய்தராபாத்தில் இளைஞர் ஒரு வரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கியுள்ளார். சொன் னபடி அந்த இளைஞருக்கு வேலை யும் வாங்கித் தரவில்லை. பணத் தையும் திருப்பித் தரவில்லை என்ற வுடன், சாமியாரைத் தட்டிக் கேட்ட பொழுது, அந்த இளைஞரை சாமி யார் கொலை செய்துள்ளார்.
சாமியார் இதுவரை 21 பேரை கொலை செய்ததாக காவல்துறையி னர் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களிடமிருந்து பணம் சொத்து உள்ளிட்டவற்றை சாமியார் அபகரித்துள்ளார்.
கொலை செய்தவர்களை சாமி யார் சத்தியம் புதைத்தாரா அல்லது உடல்களை எரித்து விட்டாரா என்பது தெரியவில்லை. இது தொடர் பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
21 பேர் தவிர மேலும் யாரையா வது சாமியார் கொலை செய்தாரா என்ற கோணத்திலும் காவல்துறையி னர் தொடர்ந்து விசாரித்து வருகின்ற னர். இந்த சம்பவம் ஆந்திரா, தெலங் கானாவில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.
இதே போல ஆந்திர மாநிலம் வனபர்த்தி மாவட்டம் நாகப்பூர் கிரா மத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சாமியாரிடம் தங்கள் குடும்ப பிரச்சினை தீர்க்க வேண்டும் எனக் கூறி வந்தனர். அவர் குடும் பத்தினர் 4 பேரையும் வரவழைத்து பில்லி சூனிய பூஜை நடத்த வேண் டும் என தெரிவித்துள்ளார். அவர் களையும் தலை துண்டித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். உடல் களை என்ன செய்தார் என்பது தெரியவில்லை. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையி னர் அவரிடம் விசாரித்து வருகின்ற னர்.
கடவுள், பூஜை, பில்லி, சூனியம் என மூடநம்பிக்கையில் ஆழ்ந்த பக்தர்களை வரிசையாக இப்படிக் கொலை செய்துள்ளது ஆந்திரா, தெலங்கானா மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment