திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விதிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 22, 2023

திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விதிகள்

திருவாங்கூர் ஆலயப் பிரவேசப் பிரகடனம் சம்பந்தமான விதிகள் இன்று மகாராஜாவின் முத்திரையுடன் வெளியிடப்பட்டுவிட்டன.

மகாராஜா தமது பிரகடனத்தில், “கோயில்களில் நேர்மையான நிலைமையைப் பாதுகாக்கவும், அவர்களுடைய சடங்கு ஆசாரங்களை நிலை நிறுத்தவும், நம்மால் விதிக்கப்படும் சட்டங்களுக்கும் நிபந்தனை களுக்கும் உட்பட்டு இன்று முதல் இன்று முதற்கொண்டு எந்த இந்துவின் பெயரிலும் பிறப்பாலோ, மதத்தாலோ நமது ஆதீனத் திலும், நமது சக்கர ஆதீனத்திலும் நிருவா கத்திலும் இருக்கக்கூடிய ஆலயங்களில் சென்று வழிபடுவதற்கு எத்தகைய தடை களும் விதிக்கக்கூடாது என பிரசித்தமாக உத்தரவு செய்து இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பொழுது பிரசுரஞ் செய்யப்பட்ட சட்டங்கள் இந்த நோக்கத்தை நிறைவேற் றுவனவாக அமைந்துள்ளன.
21ஆவது சட்டம்: ஆலய பிரவேச பிர கடனத்தால் ஏற்பட்ட பெரும் சீர்திருத்தத் திற்கு இசைந்த வண்ணம் ஆலயங்களில் நடைபெற்று வரும் சடங்கு, வழிபாடு சம்பந்தமான பழக்க வழக்கங்கள் சம்ரட்சிக் கப்படுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

ஆலயம் அதன் பிரகாரங்களின் புனிதமும் சுத்தமும் குறைவதற்கான காஸ்பதமான எத்தகைய காரியங்களையும் யாரும் செய்யக்கூடாது என்றும் இடையே விதிக்கப்பட்டிருக்கிறது. கோயில் கட்டடங் களையும் பிரகாரங்களையும் வழிபாட்டுக் குச் சம்பந்தமில்லாத காரியங்களுக்கு உப யோகப்படுத்திக் கொள்வது சட்டவிரோத மாகக் கருதப்படும்.
இன்னின்னார் இன்னின்ன இடத்திலிருந்து தான் தொழ வேண்டும் என்ற பழைய பழக்க வழக்கப்படி இருந்து வந்த கட்டுப்பாடுகள் முன் இருந்தபடியே எல்லா சமூகத்தாருக்கும் இருந்து வரும் என்றொரு முக்கிய விதியும் அச்சட்டத்தில் காணப்படுகிறது.

பிரகடனத்தின் நோக்கத்திற்கு ஏற்ற வாறு அவ்வப்பொழுது அவசியமான ஆல யப் பிரவேசம், வழிபாடு ஆகியவற்றிற்கு காலத்தை வரையறுத்து விடுவதற்கும், குறிப்பிட்ட காலத்தில் தெய்வ வழிபாட் டிற்குச் செல்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், குறிப்பிட்ட காரியத்திற் காக சில தனிப்பட்டவருக்கும், சமூகத்த வர்க்கும் பொருந்தக்கூடிய சில விசேஷ பழக்கங்களை நிலை நிறுத்தவும், அவசிய மான உத்தரவுகளிட பிரதம ஆலய நிரு வாக அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கோயில் பிர காரங்களில் கூட அடியெடுத்து வைக்கத் தகாத ஒரு சில பிரிவினரையும் சட்டம் குறிக்கிறது.
ஹிந்துக்கள் அல்லாத அனைவரும் குடும்பங்களில் ஏற்பட்ட ஜனன மரணங் களால் தீட்டு உடையவர், குடியர்கள், ஒழுக்கம் முறை தவறியவர்கள், சில காலங்களில் பெண்கள், பிச்சைக்காரர்கள் முதலியவர்கள் ஆவார். ஆலயத்திற்குச் செல்வோர் நடை உடை முதலியவை களைப் பற்றியும் கோயிலுக்கு எடுத்துச் செல்ல தகாத பொருட்களைப் பற்றியும் சட்டங்களில் பொதுவாகக் கூறப்பட்டிருக் கிறது. இச்சட்டங்களை மீறியவர்களைத் தண்டிப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. சட்டங்களில் பொதுவாகக் கூறப்பட்டிருக் கிறது.
சட்டங்களின் வியாக்கியான சம்பந்த மாக ஏற்படும் தகராறு சந்தேகம் முதலிய விஷயங்களில் எதிர்பாராத கஷ்டம் சம யத்திலும், அவசரமான சந்தர்ப்பங்களிலும் திவான் உடைய தீர்ப்பு முடிவானதாகும்.

– ‘விடுதலை’ – 12.11.1936

No comments:

Post a Comment