தினமலரே ஒப்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

தினமலரே ஒப்பம்

சேவைகள் துறையின் செயல்பாடுகளில்
கடந்த ஓராண்டில் இல்லாத சரிவு
புதுடில்லி, டிச. 7- நாட்டின் சேவைகள் துறையின் செயல்பாடு, கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு, கடந்த நவம்பரில் வீழ்ச்சியடைந்துள்ளது. விலை அழுத்தங்கள் குறைந்த போதிலும், மந்தமான ஆர்டர்கள் மற்றும் உற்பத்தி காரண மாக இந்த சரிவு ஏற்பட் டுள்ளதாக, மாதாந்திர ஆய்வு தெரி விக்கிறது. ‘எஸ்.,அண்டு பி’குளோபல் இந்தியா நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவைதுறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.

சராசரி அதிகம்
அதில் கூறப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘எஸ்., அண்டு பி., பி.எம்.அய்..’ குறியீடு, கடந்த அக்டோபரில் 58.40 புள்ளிகளாக இருந்த நிலையில், நவம்பரில் 56.90 புள்ளிகளாக குறைந்துள்ளது. முந்தைய மாதத்தைவிட சரிவை சந்தித்தாலும், விரிவாக்க விகிதமானது, அதன் நீண்ட கால சராசரியைவிட வலுவான தாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பி.எம்.அய்., குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.

வளர்ச்சி சரிவு
இந்தியாவின் சேவைகள் துறையானது, நடப்பு நிதி யாண்டின் மூன்றாவது காலாண்டின் இடையில் வளர்ச்சி வேகத்தை இழந்துள்ளது. புதிய வணிகத்திற்கான தேவை கள் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான சேவை துறையின் வலுவான தேவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. விலைகளைப் பொறுத்த வரையில், உள்ளீட்டு செலவு மற்றும் வெளியீட்டுக்கான கட்டண பணவீக்கம் ஆகிய இரண்டுக்குமான விகிதங்கள். எட்டு மாதங்களில் இல்லாத வகையில் சரிவைக் கண்டன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சேவைகள் துறை வளர்ச்சியில் நவம்பர் 2022இல் 56.40, டிசம்பர் 2022இல் 58.50, சனவரி 2023இல் 57.20, பிப்ரவரிஇல் 59.40, மார்ச்சில் 57.80, ஏப்ரலில் 62.00, மே இல் 61.20, ஜூனில் 58.50, ஜூலையில் 62.30, ஆகஸ்ட்டில் 60.10, செப்டம்பரில் 61.00, அக்டோபரில் 58.40, நவம்பரில் 56.90 ஆக வளர்ச்சி விகிதம் சரிவடைந்துள்ளது.
-ஆதாரம்: நிக்கி மார்க்கிட்

No comments:

Post a Comment