கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டக் கழக பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு தமிழர் தலைவர் பேரிடர் வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார் வெள்ள நிவாரணப் பணிகள் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 21, 2023

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டக் கழக பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு தமிழர் தலைவர் பேரிடர் வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார் வெள்ள நிவாரணப் பணிகள் தொடக்கம்

17, 18.12.2023 இரண்டு நாட்களும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி மாவட்டக் கழக பொறுப் பாளர்களுடன் தொடர்பு கொண்டு பாதிப்புகளை கேட்ட றிந்தார்.
தூத்துக்குடி மாவட்ட தொழிலாளரணி செயலாளர் முத்தையாபுரம் செல்வராசு அவர்களின் தாயாரும் மாவட்ட மாணவர் கழக செயலாளர் வள்ளியின் பாட்டியு மான முத்துலெட்சுமி (வயது75) இன்று கால மானார்.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்கள் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் தோழர் அயன்சிங்கம்பட்டி எஸ்.பிரபாகரன் வீடு கடும் மழையினால் இடிந்து விழுந்தது. மண்டபத்தில் தங்கியிருக்கும் அவரிடம் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடர்புகொண்டு சூழ்நிலைகளை கேட்ட றிந்து ஆறுதல் கூறினார்.
மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர்
மு.தமிழ்ச் செல்வம் ஆகியோரும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்கள்.
தென்காசி மாவட்டத் தலைவர்
த.வீரன், மாவட்ட ப.க. சார்பில் அளிக்கப் பட்ட உணவுப் பொட்டலங்களை பெரும் மழையிலும் சிறீவைகுண்டம் கொண்டு சென்று கொடுத்து வந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் ஆகியோர் கடும் மழையில் சிக்கித்தவித்த சிந்துபூந்துறை சந்திப்பு நடராசன் அவர்களுக்கு ரூ.5,000/தொகையளித்து உதவியுள்ளார்கள்.
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள பகுதிகளுக்கு உணவு தயாரித்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கழக காப்பாளர்கள் சு.காசி ரூ.10.000, சீ.டேவிட் செல்லத்துரை ரூ.25.000 வழங்கியுள்ளார்கள். அனைவருக்கும் தலைமைக் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment