திருநெல்வேலி, டிச. 26- திருநெல்வேலி மாவட்டத்தில் கடும்மழை, வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோயம்புத்தூர் மாவட்ட கழகத் தலைவர் சந்திரசேகர் அவர்களால் திரட்டியளிக்கப்பட்ட போர்வை, பிரட், பிஸ்கட், மெழுகுவர்த்தி, தண்ணீர் ஆகிய பொருள்கள் தச்சநல்லூர், சந்திப்பு, சுத்தமல்லி, தெருவை, டவுன், குறிச்சி, இராமையன்பட்டி, தென்கலம், பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு கழகத்தோழர்கள்வழியாக கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து வீரவநல்லூரில் கழகத்தலைவர் கருணாநிதி மூலம் பொருள்வழங்கப்பட்டது.
அடுத்துகல்லிடைக்குறிச்சி ஒன்றியம் அயன் சிங்கம்பட்டியில் சகோதரர் எஸ்.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் அனைத்து குடும்பத்திற்கும் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், காப்பாளர் இரா.காசி, பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில தலைவர் பேரா.சுப்ரமணியன் அண்ணன் மருமகன் அயன் சிங்கம்பட்டி பூதப்பாண்டியன், நெல்லை பகுதி கழகச் செயலாளர் மகேசு, மாவட்ட இளைஞரணி தலைவர் மு.தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவர் கழக தலைவர் செ.சூரியா ஆகியோர் நிவாரணப் பொருள்கள் வழங்கினார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியருக்கும், வீடு இடிந்து விழுந்ததை அறிந்து தொலைப்பேசியில் ஆறுதல் கூறிய பொதுச் செயலாளர் அன்புராஜ் அவர்களுக்கும், பெண்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். மழை வெள்ளப் பாதிப்பால் வீடு இழப்பு, பெரும் பொருள் இழப்பிற்கு ஆளான தோழர்களுக்கு நிதி வழங்கப்பட்டது.
காப்பாளர் டேவிட் செல்லத்துரை. அயன் சிங்கம்பட்டி எஸ்.பிரபாகரனுக்கு, ரூ.5,000 தென்கலம் வெள்ளத்துரைக்கு ரூ.5,000 வழங்கினார்கள்.
மாவட்டக் கழகம் சார்பில் ‘சுயமரியாதைச் சுடரொளி’ பாளை இராமன் – இணையர் லீலா, மகன் ஆனந்தன், மருமகள் பிரியா ஆகியோரிடம் ரூ10,000 காப்பாளர் காசி வழங்கினார்.
மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் சார்பில் மாவட்ட இளைஞரணி தலைவர் வீரபாண்டிய கட்டபொம்மன் குடும்பத்திற்கு ரூ.5,000 தூத்துக்குடிக்கு ரூ.5,000 வழங்கினார்.
நெல்லை பகுதி செயலாளர் மகேசு ரூ.2,000 வழங்கினார். அனைவரும் கழகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment