புயல் எச்சரிக்கையால் ரயில்கள் ரத்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாதிப்பு
சென்னை, டிச.3 கேரளாவுக்கு செல்லும் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக, டிச.3,4 மற்றும் 5ஆ-ம் தேதிகளில் 144 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆந் திரா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும், நாரசாபூர்- _கோட்டயம், மறுமார்க்கமாக கோட்டயம்- _ நாரசாபூர், செகந்தி ராபாத்- _ கொல்லம், கொல்லம்- _ செகந்திராபாத், பாட்னா- _ எர்ணாகுளம், பிலாஸ்பூர்- _ எர்ணாகுளம் உள்பட 20-க்கும் மேற்பட்டரயில்கள் ரத்து செய்யப் பட்டன.
இந்த ரயில்கள் பெரும்பாலும் கோட்டயம், எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும் இயக்கப்படும் ரயில்களாகும். ஆந்திரா, ஒடிசா, கருநாடகா உள்பட பிற மாநிலங் களைசேர்ந்தவர்களும் வடமாநிலங்களில் இருந்து வருபவர்களும் சபரிமலை செல்ல பெரும் பாலும் ரயில்களில் முன்பதிவு செய்வார்கள்.
இந்நிலையில், புயல் காரணமாக கேரளா செல்லும் 20-க்கும்மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தால், சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment