ஜெய்ப்பூர்,டிச.11- ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவி தமக்கு கிடைக்கா விட்டால் பா.ஜ.க. டில்லி மேலிடத்துக்கு எதிராக கலகம் எழுப்புவதற்கு மேனாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே சிந்தியா தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசுந்தர ராஜே சிந்தியாவை பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பலரும் சந் தித்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால் டில்லி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றன. பா.ஜ.க. 115 இடங்களில் வென்று ஆட் சியை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றி யது. காங்கிரஸ் கட்சிக்கு 69 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதலமைச்சர் யார் என்ற பிரச்சினை பா.ஜ.க.வில் வெடித்தது. டில்லி மேலி டத்தைப் பொறுத்தவரையில் வசுந்தர ராஜே சிந்தியாவை முதலமைச்சராக்க விரும்பவில்லை. டில்லி மேலிடத்தின் கட்டளைக்கு இணங்காமல் சுதந்திர மாக இருக்க விரும்புகிற குவாலியர் மகாராணி வசுந்தர ராஜே சிந்தியா. அதனால்தான் அவரை ஓரம்கட்ட முடிவு செய்தனராம் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும். வசுந்தர ராஜே சிந்தியாவுக்கு பதில் சாமியார் பாலக்நாத்தை முதலமைச்ச ராக்கவே டில்லி விரும்புகிறதாம்.
ஆனால் டில்லி மேலிடம் சட்டசபை தேர்தலின் போதும் தம்மை புறக் கணித் தது; தற்போது வெற்றி பெற்ற பின்னரும் புறக்கணிக்கிறது.. இதற்கு பழிவாங்காமல் விடப் போவதும் இல்லை- முதலமைச்சர் பதவியை ஒரு போதும் விட்டுத் தரப் போவதும் இல்லை என்பதில் வசுந்தர ராஜே சிந்தியா திட்டவட்டமாக இருக் கிறா ராம். ஏற்கனவே தமது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் ‘கட்டுப்பாட்டில்’ வைத்திருக்கிறார் வசுந்தர ராஜே சிந்தியா. சில சட்டமன்ற உறுப்பினர்களை அவரது மகன் துஷ் யந்த் ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைத் ததும் சர்ச்சையானது.
டிசம்பர் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையிலும் முதலமைச்சர் யார் என்பதை பா.ஜ.க. முடிவு செய்யாமல் தத்தளிப்பது கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்திருக்கிறது. இத னால் முதலமைச்சர் யார் என்பதை தீர்மானித்தாக வேண்டிய கட்டாயத் தில் பா.ஜ.க. இருக்கிறது. இந்த நிலையில் திடீரென ராஜஸ்தான் பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று வசுந்தர ராஜே சிந்தியா வீட்டுக்கு அடுத்தடுத்து படையெடுத்தனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் வசுந்தர ராஜே சிந்தியா பக்கமே இருக் கின்றனர். ஒருவேளை தமக்கு முதல மைச்சர் பதவியை பாஜக தர மறுத்தால் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக மேலிடத்துக்கு எதிராக கல கத்தில் இறங்கவும் வசுந்தர ராஜே சிந்தியா தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் டில்லி பாஜக மேலிடம் அதிர்ந்து போயுள்ளதாம்.
No comments:
Post a Comment