சென்னை,டிச.4- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதற்கிணங்க வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி பூவிருந்தவல்லி நகராட்சி திரு வேற்காடு நகராட்சி பகுதிகளில் உள்ள இடங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு புயல் சீற்றத்தை எதிர்கொள்ள தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ முன்னி லையில் மேற்கொள்ளப்பட் டுள்ள முன்னெச்சரிக்கை நட வடிக்கையில் குறித்து ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோச னைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.
உடன் பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, நகராட்சி நிர் வாகத்துறை முதன்மைச் செய லாளர் கார்த்திகேயன், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதய குமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல்லா ரகுமான், நகர் மன்ற தலை வர்கள் என்.இ.கே.மூர்த்தி, காஞ்சனா சுதாகர், மண்டல குழு தலைவர் ஜி.ராஜேந்திரன், மாநகர நகர பகுதி கழக செய லாளர் சன்.பிரகாஷ், ஜி.ஆர்.திருமலை, ஜி.நாராயண பிர சாத், பொன்.விஜயன், துணை தலைவர் சிறீதர் உள்பட நக ராட்சி துறை அதிகாரிகள் தி.மு.கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (03.12.2023) வங்கக்கட லில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைக ளின் ஒருபகுதியாக கோடம் பாக்கம் இரயில் நிலையத்தில் அதிக திறன் கொண்ட மோட் டார் பம்புகள் மூலமாக மழை நீர் வெளியேற்றும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடு தல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ. ராதா கிருஷ்ணன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற் றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், தலைமைப் பொறியா ளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனி ருந்தனர்.
No comments:
Post a Comment