பா.ஜ.க.வின் ‘பி’ டீம்தான் அ.தி.மு.க. சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

பா.ஜ.க.வின் ‘பி’ டீம்தான் அ.தி.மு.க. சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

featured image

கோயம்புத்தூர், டிச. 7- ஒன்றிய மோடி அரசின் மக்களுக்கு விரோதமான சட்டங்களுக்கு சிறு எதிர்ப்பைக்கூட தெரிவிக் காமல் நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு இப்போது நாங்கள் கூட்டு இல்லை என்று சொல்வது மக்களை ஏமாற்று வதற்கான நாடகமே. பாஜகவின் பி டீம்தான் அதிமுக என கோவை பொதுக் கூட்டத்தில் சி.பி.எம். மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து கோயில்களை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க முதல் கையெழுத்து போடு வோம் என கூறுகிறார் அண் ணாமலை. ஆனால் 200 ஆண் டுகள் ஆனாலும் அவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப் போவதில்லை.

வைப்புத் தொகையையாவது வாங்கி விட முடியாதா என்ப தற்காக தான் அண்ணாமலை தற்போது நடை பயணம் சென்று கொண்டிருக்கிறார்.
வழிப்பறியைவிட மோசமானது

மருத்துவரிடம் வழக்கை திரும்பப் பெற ரூ. 3 கோடி கேட்டதாக அங்கீத் திவாரி என்ற அமலாக்கத் துறை அதி காரி, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டிருக்கிறார். பாஜகவின் ஏவல் துறையாக இருக்கும் அமலாக்கத்துறை இப்போது கையும் களவு மாக மாட்டியிருக்கிறது. இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்?

அமலாக்கத்துறை மூலம் ‘ரெய்டு’ நடத்தி அதில் பேரம் பேசி கட்சிக்கு தேர்தல் நிதி சேகரிக்கும் பணியை பாஜக செய்து வருகிறது. இது வழிப் பறியை விட மோசமானது. இந்த பணத்தை வைத்துத் தான் அண்ணாமலை நடை பயணம் என்கிற பெயரில் சொகுசு பயணம் நடத்தி வருகிறார். ஒன்றியத்தை பாஜக ஆளுகிறது என்கிற தைரியத் தில் கண்டதையும் பேசிவரும் அண்ணாமலை, மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டுகிற போது தமிழ்நாட்டில் இவர் ஆட்டமும் முடிவுக்கு வரும், அட்ரஸ் இல்லாமல் போகும். தற்போது எடப்பாடி பழனி சாமி மக்களுக்காக கண்ணீர் வடித்து கதறுவது போல நடிக்கிறார், எதற்கெடுத்தாலும் நடவடிக்கை எடு என அரசை கேட்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிதானே இருந் தது. அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை பட்டியல் போட்டு காட்ட முடியும்.

பொள்ளாச்சி கொடுமை

பொள்ளாச்சியில் நடந்த கொடுமையே அதிமுகவின் ஆட்சிக்கு சாட்சி. இளம் பெண் கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மோசமான சம்பவம் அதிமுக ஆட்சியில் அரங்கேறியது. இதன் பிரதான குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை எடப்பாடி மறுக்க முடியுமா? பொள்ளாச்சி கொடூரம் சம்பவத்தை கண் டித்து, இடதுசாரி அமைப்பு களின் தொடர் போராட்டத் திற்குப் பிறகு இந்த விவகாரத் தில் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

குருவி சுடுவதைப்போல் சுட்டார்கள். அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைக் காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என சொன்னவர் தான் எடப்பாடி பழனிசாமி. தூத்துக்குடி துப் பாக்கிச் சூடு விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுதான் எடப்பாடியின் ஆட்சியின் லட்சணம். எடப் பாடி ஆட்சியில் இருந்தபோது, அமைத்த குழுவின் தலைவர் அருணா ஜெகதீசன்தான், அவ ரது அறிக்கையில் முதலமைச்ச ருக்கு தெரியாமல் இந்த துப் பாக்கிச் சூடு சம்பவம் நடை பெற்று இருக்க வாய்ப்பே இல்லை என தெரிவித்திருக் கிறார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத் திற்கு, காவல்துறை அதிகாரி கள் மட்டுமல்ல, முதலமைச்ச ராக இருந்து பொறுப்பு வகித்த எடப்பாடி பழனிச்சாமியும் காவல்துறைக்கு பொறுப்பு என அந்த அறிக்கை சுட்டிக் காட்டிருக்கிறது. இதற்கு எடப் பாடி என்ன பதில் சொல்லப் போகிறார்.

அதிமுக பாஜகவுடன் கூட் டணி முறித்துக் கொண்டாலும் “பி’’ டீமாக செயல்படுகின்றது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல் வியை சந்திக்கும். முத்த லாக், சிஏஏ, காஷ்மீர், மாநிலம் கலைப்பு வேளாண் விரோத சட்டம் போன்றவற்றில், அதிமுக ஆத ரவையே தெரிவித்தது. அன்று இவர்கள் ஆதரிக்காமல் இருந்தி ருந்தால் இந்த சட்டங்கள் காலாவதியாகி இருக்கும்.

அப்போதெல்லாம் சிறு எதிர்ப்பு கூட தெரிவிக்காமல், ஆதரித்துவிட்டு இப்போது எடப்பாடி பழனிச்சாமி, சிறு பான்மை மக்களின் காவலன் என கூறுகிறார்கள். யாரை ஏமாற்ற பார்க்கிறது அதிமுக.

பா.ஜ.க.வோடு வெளிநடப்பு

நாடாளுமன்றத்தில் ஒரு முறையாவது மோடியை எதிர்த்து கேள்வி கேட்டதுண்டா அதிமுக. எட்டு கோடி தமிழ்நாட்டு மக் களுக்கும் துரோகம் இழைத்து விட்டு இப்போது வேடம் போடுவதை தமிழ்நாட்டு மக் கள் ஏற்கமாட்டார்கள்.
இப்போது கூட ஆளுநர் அடாவடிக்கு எதிராக ஒரு வார்த்தை பேசுகிறதா அதிமுக பேசவில்லை என்பது மட்டு மல்ல தமிழ்நாடு சட்ட மன் றத்தில் நிறைவேற்றப்படும் தீர் மானத்தை எதிர்த்து பாஜகவோடு அதிமுகவும் வெளிநடப்பு செய்கி றது. எனவே, பாஜக மற்றும் அதிமுகவினர் எவ்வளவு பிரச் சாரம் செய்தாலும் அது தமிழக மக்களிடையே எடுபடாது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற் றும், அத்தகைய தேர்தல் பணி களை உடனடியாக நாங்கள் துவங்க இருக்கிறோம்.

பீக் அவர் மின் கட்டண உயர்வு, நிலைக்கட்டண உயர்வு ஆகியவற்றால் தமிழ்நாட்டின் சிறுகுறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்த கோரிக்கை வைத்தாலும் ஒன் றிய அரசு செய்யாது என தொழில் முனைவோர்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர்.

ஆகவே, தமிழ்நாடு அரசின் மீது நம்பிக்கை வைத்து சிறு குறு தொழில் முனைவோர் போராட்டம் நடத்தி வருகின் றனர். அவர்களின் கோரிக் கையை தமிழ்நாடு முதல மைச்சர் நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட் டுக் கொள்கிறது.

போராடும், சிறுகுறு தொழில் முனைவோர் களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்று கே.பால கிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment