சென்னை, டிச.7 ‘மிக்ஜாம்’ புயல் நிவாரணப் பணிகளில் அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அத்தோடு தன்னார்வலர்களும், திராவிடர் கழகம் போன்ற சமூக அமைப்புகளும் மக்களின் தேவை கருதி களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பொழிந்த மழையில், ‘பெரியார் தொண்டறம் அணி’ சார்பில் மிகச் சிறப்பாக மக்களுக்கு நிவாரணப் பணிகள் செய்யப் பட்டன. அதே போல் கடந்த சில நாள்களுக்குமுன் பொழிந்த மழை மற்றும் புயல் காரணமாக 50 ஆண்டு களில் இல்லாத மழைப் பொழிவு மற்றும் புயல் காரணமாக தாழ்வான பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக் கின்றன.
அதனால் வேளச்சேரி அதை ஒட்டியுள்ள ராம்நகர், முருகன் நகர் ஆகியவை தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள பகுதிகளாகும். அங்கே மக்களின் அத்தியாவசியத் தேவைகளான. உணவுப் பொருட்கள், பிஸ்கட், பிரட் ஆகியவற்றை நேற்று (6.12.2023) பெரியார் தொண்டரணித் தோழர்கள் வழங்கினர். இதற்காக காவல்துறையிடம் படகுகள் பெற்று அதில் பொருட்களைக் கொண்டு சென்று கொடுத்தனர்.
ச.பிரின்சு என்னாரெசு பெரியார், எமரால்ட் கோ.ஒளிவண்ணன், செல்வமீனாட்சி சுந்தரம், தமிழ் க. அமுதரசன், பொள்ளாச்சி சித்திக், வழக்குரைஞர்கள் தமிழன் பிரசன்னா, தளபதி பாண்டியன், அறிவேந்தன் போன்றோர் இப்பணிகளில் ஈடுபட்டனர். இதற்கான உணவு கீழ்ப்பாக்கத்தில் தயார் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
இன்னொரு குழுவினர் வட சென்னையில் கொருக் குப்பேட்டை, எருக்கஞ்சேரி, பெரம்பூர், மகாகவி பாரதி நகர் ஆகிய பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டனர். வழக்குரைஞர் தளபதி பாண்டியன் ஒருங் கிணைப்பில், பிரசாந்த், ஜாகீர், ஜான் பரத் அபி, பர்தீன், வழக்குரைஞர் சஞ்சய் ஆகியோர் ஈடுபட்டனர்.
இன்று (7.12.2023) பள்ளிக்கரணை பகுதியில் நிவார ணப் பணிகள் நடைபெறுகின்றன. தாம்பரத்தில் மாவட் டத் தலைவர் பா.முத்தையன் தலைமையில் உணவுத் தயாரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
No comments:
Post a Comment