ஆசிரியர் பிறந்தநாள் சிறப்பு வெளியீடுகள் அறிமுகம் தென்காசியில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

ஆசிரியர் பிறந்தநாள் சிறப்பு வெளியீடுகள் அறிமுகம் தென்காசியில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழா

தென்காசி, டிச. 2- தென்காசி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் கலைஞர் அறிவாலயத்தில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91-ஆவது பிறந்த நாள் விழா இன்று (2.12.2023) காலை 9.30 மணிக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமை யில் எழுச்சியோடு நடைபெற்றது. 

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தமி ழர் தலைவரின் பிறந்தநாள் செய் தியினை வாசித்தார்.அனைவரும் கரவொலி எழுப்பி மகிழ்ந்தார்கள். 

புதிய புத்தகமான வாழ்வியல் சிந்தனை பாகம்-17 - பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி 91-ஆவது பிறந்தநாள் விழா மகளிர் மலர், விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள் என்ற  நூல்களை மாவட்ட திமுக செயலாளர் வே. செயபாலன் வெளியிட்டார்.

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஈ.இராசா பெற்றுக்கொண்டுவாழ்த்துரை வழங்கினார். கழக காப்பாளர் டேவிட் செல்லத்துரை ,மாநில பக அமைப்பாளர் பா.எழில்வாணன், மாநில பக.துணைத்தலைவர் கே.டி.சி.குருசாமி, நகர்மன்ற சாத கர்,  துணைத்தலைவர் கே.என்.எல். சுப்பையா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவுது, கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்  மாயவன், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை முக் கூடல் தேர்வு கழக செயலாளர் லட்சுமணன், கீழப்பாவூர் சேர்மன் பி.எம்.எஸ்.ராஜன், தென்காசி யூனி யன் சேர்மன் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங் கீதா சுதாகர், சரஸ்வதி பாஸ்கரன், தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி சங்கரநாராயணன், செங்கோட்¬ டநசீர், மாவட்ட மதிமுக அவைத் தலைவர் செல்வ சக்தி வடிவேல், நகர செயலாளர் கார்த்திக், பொதுக் குழு உறுப்பினர் சாமித்துரை, குற்றாலம் பேச்சு முத்து, மதுரை வழக்குரைஞர் கணேசன், மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று நூல்களைப் பெற்று சிறப்பித்தார்கள். 

நிறைவாக  கழகப்பேச்சாளர் இராம.அன்பழகன்,  மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் சிறப்புரையாற்றினார். 

61 தோழர்கள் செட்புத்தகம் பெற்று மகிழ்ந்தார்கள், ஆலங் குளம் குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment