சென்னை, டிச.21 தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமர குரு பரன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வி இயக்கத்தின் நிர் வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்ட தாரி ஆசிரியர்கள் 757 பேரை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தற்போது வழிவகையில்லை.
ஆனால் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரி யர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட மாண வர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு பணி நியமனம் செய்ய லாம். ஆசிரியர் பணியிடங்களை கணக்கில் கொண்டு பிரதி ஆண்டு ஜூன்.30-ஆம் தேதிக்குள் பணி நியமனங்களை முடிக்க வேண்டும்.
அதைத்தொடர்ந்து ஜூலை 1ஆ-ம் தேதி முழு விவரங்களுடன் காலிப் பணியிட மதிப்பீட்டை அரசின் அனுமதிக்கு அனுப்ப வேண்டும்.
அதே போல தற் போது பட்டதாரி ஆசி ரியர்களுக்கான 2 ஆயிரம் பணியிடங் களை நிரப்ப அனுமதிக் கப்பட்டதில் தேர்வாகும் தேர்வர் களை, பணியிடங் கள் காலியாகவுள்ள கிருஷ் ணகிரி, திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களில் முன்னுரிமை அடிப் படையில் நியமனம் செய்ய வேண்டும்.
அப்போது குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் இம்மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஆசிரியர்கள் நியமிக்கப் பட வேண்டும். ஆசிரியர் பொது மாறுதல் கலந் தாய்வு நடைபெறுதல் குறித்து வெளியிடப்பட் டுள்ள வழிகாட்டு நெறி முறைகளின் படி, பணி நியமனங்கள் நடைமுறை பின்பற்றப்பட்ட பின்னர், ஆசிரியர் பொது மாறு தல் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment