சென்னை, டிச.7- சட்டமேதை அம்பேத்கரின் 67-ஆவது நினைவு நாளில் (6.12.2023) அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் மரியாதை செலுத்தினர். தலைநகர் டில்லியில், அம்பேத்கர் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், அம்பேத்கர் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:-
“இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, ஜாதிப் பிரிவினையால் ஒடுக் கும் கொடுமைகளுக்கான மூலகாரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர். உண்மை யான பிரிவினை எது என்பதை எடுத்துச் சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களை சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர்!. அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்!. எத்தகைய இடர்களும் சூழ்ச்சி களும் வந்தாலும், சமத்துவத்தை நோக்கி சளைக்காமல் உழைக்கப் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் உறுதி யேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment