மக்களவையில் எஸ்.ஜெகத்ரட்சகன் கேள்வி
புதுடில்லி, டிச. 7- அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் 4.12.2023 அன்று மக்கள வையில், இந்தியக் கல்வி முறையை சமச்சீரான கல்வி முறையை செயல்படுத்தவும், உல கத் தரத்திற்கு உயர்த்தவும், ஒருங் கிணைந்த கல்வியைஉருவாக்கவும், தேசியக் கல்விக் கொள்கையின் பங்களிப்பு எவ்வாறு உதவும்? என்றும் ஒன்றிய அரசின் கல்வித் துறை இணை யமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் அவர்களிடம் விரிவான கேள் வியை எழுப்பினார். ஒன்றிய அரசின் கல்வித்துறை இணையமைச்சர் அளித்த பதில் பின்வருமாறு:-
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தேவையான அனைவருக்குமான, தாமானகல்வியைநோக்கியும் நீடித்த வளர்ச்சி இலக்கை நிறைவுசெய்யும் வகையிலும் சமச்சீர் கல்வியை அனைவருக்கும் வழங்கும் விதமாகவும், தேசியக் கல்விக் கொள்கை 2020 வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்து மாணவர்களுக்குமான திறமைக்கும், தேவைக்கும், ஆர்வத்திற்கும் உரியவகையில், கலைகல்வி முறைகளை ஊக்கப்படுத்தவும். தேவையான அறிவியல்,சமச்சீரானவளர்ச்சியைஉறுதிபடுத்தவும், தேசிய கல்விக் கொள்கையில் தேவையான மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளதாகவும் அரசின் இணையமைச்சர் மக்களவை யில் தெரிவித்தார்.
மேலும், உயர்கல்விக்கான தேசிய பாடத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டமாற்றங்களின்தேவையறிந்து பல்வேறுபாடங் களின் இணைய வழிக்கல்வியை ஊக்கு விக்கவும், விளைவாக, திட்டத்தின் மாணவர்களின் தேர்வு களை எதிர்கொள்ளவும், கல்வி நிறுவனங்களில் மாற்றங் களை தேசியக்கொள்கை கடைப்பிடித்து வருகிறது என் றும் ஒன்றிய அரசின் கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் அவர்கள், மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் எழுப்பிய கேள்விக்கு பதிலாக அளித்துள்ளார்.
No comments:
Post a Comment