நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 6, 2023

நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை

புதுடில்லி, டிச. 6- மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவை களில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப் பட்ட நிலையில், 4 மாநிலத் தோதலில் வெற்றி பெற்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் ரிசர்ச் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2018-ஆம் ஆண்டு சத்தீஸ்கர் பேரவைத் தோத லில் வெற்றி பெற்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 13. இந்த எண்ணிக்கை தற்போது நடைபெற்ற தோதலில் 19-ஆக அதிகரித்துள்ளது. இது தோதலில் வெற்றி பெற்ற மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 21 சதவீதம்.

2018-ஆம் ஆண்டு தெலங்கானாவில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6. இது தற்போது 10-ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 8 சதவீதம்.

2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 24. இது தற்போது 20-ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கு சற்று அதிகம்.

2018-ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் 21 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில், தற்போது 27 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தோவு செய்யப்பட்டுள்ளனர். இது மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 11 சதவீதத்துக்கும் அதிகம்.

நான்கு மாநிலத் தோதலிலும் சோத்து மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் பெண்களின் எண்ணிக்கை 33 சதவீதத் துக்கும் குறைவாகவே உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 55: நான்கு மாநிலத் தோதலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக வயது கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சத்தீஸ்கரில் வெற்றி பெற்ற மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் 41 சதவீதம் பேரும், மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்ற மொத்த சட்டமன்ற உறுப் பினர்களில் 50 சதவீதம் பேரும் 55 வயதைக் கடந்தவர்கள். ராஜஸ்தானில் 46 சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள், தெலங் கானாவில் 60 சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் 55 வயதைத் தாண்டியவர்கள். பட்டப் படிப்பு: சத்தீஸ்கரில் 59 சதவீத சட்டமன்ற உறுப்பினர்களும், தெலங்கானாவில் 70 சதவீத சட்டமன்ற உறுப்பினர்களும், ராஜஸ்தானில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும் குறைந்தபட்சம் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 36 சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் இளநிலைப் பட்டப் படிப்பும், 35 சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் முதுநிலைப் பட்டப் படிப்பும் படித்துள்ளனர்.

No comments:

Post a Comment