சிவில் சர்வீஸ் வினாத்தாள்களை அனைத்து மொழிகளிலும் வழங்க முடியாதா? யுபிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 9, 2023

சிவில் சர்வீஸ் வினாத்தாள்களை அனைத்து மொழிகளிலும் வழங்க முடியாதா? யுபிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

featured image

சென்னை, டிச. 9- அய்.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான தேர்வு களை அனைத்து மொழி களிலும் எழுத அனுமதித் துள்ள நிலையில் கேள் வித்தாள்களையும் அந் தந்த மாநில மொழிகளில் ஏன் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசின் பணி யாளர் தேர்வாணையத் துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் சென்னை உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்தி ருந்த மனுவில், ”அய்.ஏ. எஸ்., அய்.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வு களை அனைத்து மொழி களிலும் எழுத ஒன்றிய அரசின் பணியாளர் தேர் வாணையம் (யுபிஎஸ்சி) அனுமதி அளித்துள்ளது. ஆனால் கேள்வித்தாள் களை மட்டும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வழங் குகிறது. இதனால் கேள் விகளைப் புரிந்து கொண்டு சரியாக பதிலளிக்க முடி யாத நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற உயர் பதவி வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்பு மறுக்கப்படுகி றது. எனவே அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் அய்.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுக ளுக்கான கேள்வித்தாள் களையும் வழங்க யுபிஎஸ் சி-க்கு உத்தரவிட வேண் டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர் வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகி யோர் அடங்கிய அமர் வில் 7.12.2023 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசுப் பணியாளர் தேர் வாணையம் சார்பில், சிவில் சர்வீசஸ் உள்பட மத்திய அரசின் பணியா ளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளும் விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்படு கிறது. இதுதொடர்பாக பதிலளிக்க கால அவ காசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், சிவில் சர்வீஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான கேள்வித்தாள்களையும் அந்தந்த மாநில மொழி களில் ஏன் வழங்கக் கூடாது என ஒன்றிய அர சின் பணியாளர் தேர் வாணையத்துக்கு கேள்வி எழுப்பி, இதுதொடர் பாக பதிலளிக்க உத்தர விட்டு விசாரணையை வரும் ஜனவரி மாதத் துக்கு தள்ளி வைத்துள்ள னர்.

No comments:

Post a Comment