பல்கலைக்கழக சட்ட திருத்த சட்ட முன் வரைவுகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம்: தமிழ்நாடு அரசு கூடுதல் மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 13, 2023

பல்கலைக்கழக சட்ட திருத்த சட்ட முன் வரைவுகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம்: தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

புதுடில்லி, டிச. 13- பல்கலைக்கழக சட் டத்திருத்த மசோதாக்களை குடிய ரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளு நரின் நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு பல்கலைக்கழகங் களில் துணை வேந்தராக முதல மைச்சரே இருக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாக்களை, சட்டசபை யில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இதற்கு ஆளுந ரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நீண்டநாள் கிடப்பில் இருக்கும் மசோதாக் களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன் றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனிடையே சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட பல் கலைக்கழக சட்டத் திருத்த மசோ தாக்களை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் ஆர் என்.ரவி அனுப்பினார்.
ஆளுநரின் இந்த நடவடிக் கையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குரைஞர் சபரீஷ் சுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள மனுவில், ஏற்கெனவே ரிட் மனுவில் கோரிக்கைகளை திருத்தம் செய்ய தலைமை நீதிபதி யிடம் அனுமதிகோரியுள்ளார்.

அதில், பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை அரசமைப்பு சட் டத்திற்கு முரணானது, சட்ட விரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது என அறிவிக்க வேண்டும்.

மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததை ரத்து செய்ய வேண்டும். சட்டசபை யில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தலைமை நீதி பதி தலைமையிலான அமர்வு முன் இன்று (13.12.2023) விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment