புதுடில்லி, டிச.6 தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்' புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்தி களைக் கேட்டு வேதனை அடைந்தேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
‘மிக்ஜாம்' புயல் எதிரொலியால் சென்னையே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரவலாக பல பகுதி களில் மின்சாரம் துண்டிக்கபட்டிருக் கிறது. கனமழையால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னை ஆர்.கே.நகர், வேளச்சேரி பகுதியில் மழை நீர் சூழ்ந் ததால் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்களை படகுகள் மூலம் காவல்துறை யினர் மீட்டு வருகின்றனர். ‘மிக்ஜாம்' புயல் வெள்ள பாதிப்பால் தமிழ்நாட்டில் சுமார் 8 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விடிய விடிய மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடு கையில் சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் இந்த முறை பெருமளவு குறைந்திருக்கிறது என்று தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.
இந்த நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ‘‘தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்திகளைக் கேட்டு வேதனை அடைந்தேன். தங் களுடைய அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் தமிழ்நாடு, ஆந் திர, ஒடிசா மாநிலங்களில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து காங் கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment