சென்னை, டிச. 6- வெள்ளத்தில் சிக்கியுள்ளவர் களை மீட்கும் பணியில் ட்ரோன்கள் புதன் கிழமை (டிச.6) முதல் பயன்படுத்தப்படவுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் ,எழும்பூர், நரியங்காடு காவலர் குடியிருப்புக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டார். மேலும் அவர், காவலர் குடும்பத்தினரிடமும், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்து உணவுப் பொருள்கள், குடிநீர் பாட்டில்களை வழங்கினார்.
பின்னர் அவர் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோட் அளித்த பேட்டி: தென் சென்னையில் தண்ணீர் அதிகமுள்ள பகுதியில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மீட்புப் பணிக்கு கூடுதலாக படகு வரவழைக்கப்படுகிறது. சமூக ஊடகங்கள் மூலமாக பொதுமக்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் மீட்புப் பணி நடை பெறுகிறது. ட்ரோன் மூலமாக தண்ணீரில் சிக்கியவர்களை கண்டறிந்து, அவர்களை படகு மூலம் மீட்கும் நடவடிக்கையை புதன் கிழமை (டிச.6) முதல் தொடங்கவுள்ளோம். வெள்ளத்தில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளோம். முக்கியமான சாலைகளில் தேங்கும் தண்ணீர் வேகமாக வெளியேற்றப் படுகிறது என்றார் அவர்.
No comments:
Post a Comment