போபால், டிச.22 மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்ச ராக மோகன் (யாதவ்) பதவி ஏற்றபிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டப்பட்டது, சட்டமன்றத்தில் ஏற்கெனவே இருந்த மேனாள் பிரதமர் நேருவின் படம் அகற்றப்பட்டு அங்கு பாபா சாகேப் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினரிடையே இச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தீவிர ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளரும், மத விரோதப் பேச்சில் அடிக்கடி சிக்கியுள்ளவருமான மோகன் (யாதவ்) என்பவர் முதலமைச்சர் ஆகியுள்ளார்.
இவர் முதலமைச்சர் பதவி ஏற்ற பிறகு போட்ட முதல் கையெழுத்தே வழிப்பாட்டுத் தலங்களில் ஓசை எழுப்பும் ஒலி பெருக்கியை அகற்றவேண்டும், திறந்த வெளி இறைச்சிக்கடைகளை மூடவேண்டும் என்பன தான்.
இதனை அடுத்து மாநிலம் முழுவதிலும் இறைச்சிக் கடைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களில் இருந்து தொழுகை அழைப்பிற்கான ஒலி பெருக்கிகள் அகற்றப்பட்டன.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் துவங்கியது, அங்கும் ஒருமாற்றம் காணப்பட்டது.
அதாவது சட்டப்பேரவையில் காந்தியார் படமும், முதல் பிரதமர் நேரு படமும் வைக்கப்பட்ட இடத்தில், நேரு படம் அகற்றப்பட்டு அங்கு பாபா சாகேப் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டது.
‘பாரத ரத்னா’ பாபா சாகேப் படம் வைப்பது வர வேற்கத்தக்கதுதான். அப்படம் இதுவரை அங்கு இல்லை என்பதுதான் கண்டனத்துக்குரியது. அதே நேரத்தில், ஏற்கெனவே இருந்த மேனாள் பிரதமர் நேரு படத்தை நீக்கிவிட்டு, அந்த இடத்தில்தான் அண்ணல் அம்பேத்கர் படம் வைக்கப்பட வேண்டுமா?
பி.ஜே.பி.யைத் தெரிந்தவர்களுக்கு இதற்குள்ளி ருக்கும் அரசியல் நோக்கம் நன்றாகவே தெரியும்!
‘விநாச காலே விபரீதப் புத்தி’ என்பது இதுதானோ!
No comments:
Post a Comment