திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா

பல்வேறு கட்சியினர், முக்கிய தலைவர்கள், கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து!

சென்னை,டிச.2- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் 91 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி இன்று (2.12.2023) காலை சென்னை அடையாறிலுள்ள ஆசிரியர் அவர்களின் இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் கழக மகளிரணியின் சார்பில் அறிவிக்கப்பட்டு, தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப் பட்டு அறிவிக்கப்பட்டது. 

ஆனாலும், இன்று (2.12.2023) காலை முதலே சென்னை பெரியார் திடலில் கழகப்பொறுப்பாளர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவிந்தவண்ணம் இருந்தனர். நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில்   கூடிய கழகப்பொறுப்பாளர்களையும், பல்வேறு அமைப்பினரையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சந்தித்து மிகுந்த மகிழ்வுடன்  அளவளாவினார். குடும்பம் குடும்பமாக கழகப்பொறுப்பாளர்கள் திரண்டு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

முன்னதாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கேக் வெட்டினார். கழகத் தலைவருக்கும், மோகனா அம்மையா ருக்கும் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். 

கழகத் தலைவர் ஆசிரியர் கேக் வெட்டி துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனுக்குக் கேக் ஊட்டினார்; கழகத் தலைவருக்கு துணைத் தலைவர் கேக் ஊட்டினார்.

பல்வேறு கட்சிப் பொறுப்பாளர்கள், முக்கிய தலைவர்கள், கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவிக்க அணி அணியாகத் திரண்டு பொன்னாடை அணிவித்தும், புத்தகங் களை வழங்கியும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விடுதலைப் பணிமனையினர், பெரியார் திடல் வளா கத்தில் பணியாற்றுவோர் மேலாளர் ப.சீத்தாராமன் தலை மையில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

திமுக

சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக அமைப்புச்செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் இ.பரந்தாமன், திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு, திமுக மேனாள் வட்ட தி.மு.க. செயலாளர் பெரிய மேடு ஜெ.கிருஷ்ணமூர்த்தி, புரசைவாக்கம் சின்னி கிருஷ்ணன், ஈரோடு இறைவன், ஜெயகிருட்டிணன் குடும் பத்தார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இன்பா.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, சிந்தனை செல்வன், பனையூர் பாபு மற்றும் செல்வம் பொறுப்பாளர்கள்

காங்கிரசு கட்சி

காங்கிரசு கட்சி பொறுப்பாளர்கள் ஊடகப்பிரிவு செயலாளர் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சன் குமார், எஸ்.ஏ.வாசு, நித்தியானந்தன், நிரேஷ்குமார், தக்கோலம் ஜம்பு,

மதிமுக

மதிமுக பொதுச்செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ தமிழர் தலைவர்ஆசிரியருக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மதிமுக பொறுப்பாளர்கள் ஆ.வந்தியதேவன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேரிலும், சிபிஅய் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொலைபேசியிலும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.  

கட்டட தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார்,

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்,

வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கம் நிறுவனத் தலைவர் வழக்குரைஞர் எல்.டி.ஆர்.இளையகட்டபொம்மன் வீரவாளை பரிசளித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

சட்டக்கதிர் இதழ் ஆசிரியர் வழக்குரைஞர் சம்பத், அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர்கள் சாதிக், திருவாசகம், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் மேனாள் துணைவேந்தர் அ.இராமசாமி, பேராசிரியர் அ.கருணானந்தன், நீதியரசர் ஏ.கே.ராஜன், திராவிட இயக்க வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் முனைவர் பெ.ஜெகதீசன், மூத்த வழக்குரைஞர் தியாகராஜன், மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன், பேராசிரியர் மு.நாகநாதன், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், சட்டமன்ற மேனாள் செயலாளர் மா.செல்வராஜ், எழுத்தாளர் முத்துவாவாசி, சென்னை பல்கலைக்கழகம் தமிழ்த்துறை பேராசிரியர் ய.மணிகண்டன், ஊடக வியலாளர்கள் கோவி.லெனின், மு.குணசேகரன், அன்புமதி, ப.திருமாவேலன், தமிழ்க்கேள்வி செந்தில்வேல், கவிஞர் கண்மதியன், தங்கவேல்-இந்துமதி, விழிகள் பதிப்பகம் வேணுகோபால், இயக்குநர் ஞான ராஜசேகரன், மருத்துவர் சக்திராஜன், மருத்துவர் மீனாம்பாள், பெரியார் பன்னாட்டு அமைப்பு - அமெரிக்கா அருள்செல்வி பாலகுரு, சிங்கப்பூர் கவிதா மாறன், சுதா அன்புராஜ், அ.கபிலன், டாக்டர் அ.சூர்யா, க.இறைவி, காரைக்குடி சமதர்மம், ஆடிட்டர் இராமச்சந்திரன், பொறியாளர் சாமிநாதன், பேராசிரியர் தேவதாஸ், எழுத்தாளர் ஓவியா, வழக்குரைஞர் சு.குமாரதேவன், மணவழகர் மன்றம் கன்னியப்பன், திண்டிவனம் சிறீராமுலு, கவிஞர் பெருமதியழகன், வழக்குரைஞர் ரவி, வழக்குரைஞர் கே.வீரமணி, இந்தியன்ஓவர்சீஸ் வங்கி வேப்பேரி கிளை மேலாளர் அனுமித்தாராவ் மற்றும் வங்கி ஊழியர்கள்

கழகப் பொறுப்பாளர்கள் 

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, துணைப் பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் வீரவிளையாட்டுக்குழுத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம்,  தே.செ.கோபால், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீர சேகரன்,  செயலாளர் மதுரை சித்தார்த்தன், வழக்குரைஞர்கள் செ.துரைசாமி, மு.சென்னியப்பன், துரை அருண்குமார், கன்னியாகுமரி கிருஷ்ணேசுவரி, விடுதலை க.சரவணன் குடும்பத்தினர், தென்சென்னை இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் ப.முத்தையன், கோ.நாத்திகன், வடசென்னை தளபதிபாண்டியன், புரசை அன்புசெல்வன்,   மாணிக்கம், ஒக்கநாடு கீழையூர் அஞ்சம்மாள், கவுதமன், மும்பை கணேசன், பொறியாளர் நாகராஜன், சோழிங்கநல்லூர் மாவட்ட பொறுப்பாளர்கள், ஆவடி மாவட்டம் தமிழ்செல்வன், வடிவேலு, நடராசன் மற்றும் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு மூதறிஞர் குழு பொருளாளர் த.கு.திவாகரன்,  பொறியாளர் நாகராஜன், சி.காமராஜ், கழக மகளிரணி தோழர்கள் சி.வெற்றிசெல்வி, பெரியார் செல்வி, இறைவி, பசும்பொன், வளர்மதி, செல்வி முரளி, பூவை செல்வி, சீர்த்தி, தங்க.தனலட்சுமி, க.சுமதி, வெண்ணிலா, செஞ்சி கீதா கோபண்ணா மற்றும் பெரியார் திடல் பணியாளர்கள் அணிஅணியாக திரண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.


No comments:

Post a Comment